ரோமாபுரிப் பாண்டியன்
199
எழுந்து நின்று வணங்கினார். அரசன் அங்கு நின்ற இரண்டு வீரர்களையும் சைகை காட்டி வெளியே அனுப்பி விட்டான். கதவுகளும் சாத்தப்பட்டன. திரைமறைவில் நின்ற வீரர்கள் மூச்சுவிடும் ஒலி கூட வெளியே கேட்காமல் அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒற்றரை உட்காருமாறு கூறிவிட்டு அரசன் அமர்ந்தான். ஒற்றனின் முதுமைத் தோற்றமும் முகபாவமும் கரிகாலனுக்கு வெறுப்பைத் தந்தது என்பதை முத்துநகை புரிந்து கொண்டாள். அவளுக்கு இந்தச் சந்திப்பின் முக்கியத்துவம் பற்றிய கவலையெல்லாம் பறந்தோடி விட்டது. கரிகாலன் பேசிய மொழிகள் அவளை மிகவும் கலவரப் படுத்தியிருந்தன. இவ்வளவு நல்லெண்ணத்துடன் நாட்டுக்குத் தொண்டாற்ற முன்வந்தும் இறுதியில் பழிவந்து சேர்ந்ததே என வருந்தினாள். - வேதனைப்பட்டுப் புழுங்கினாள். கரிகாலன் ஒற்றனுடன் பேச ஆரம்பித்தான்.
"வயதான காலத்தில் பாண்டிய நாட்டுக்காகத் தாங்கள் படும் கஷ்டத்தை முத்துநகை சொல்லக் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி."
அந்தப் பாராட்டுரைக்கு ஒற்றர் பதில் கூறவில்லை. நன்றியோடு சிரித்துக் கொண்டார்.
"இப்போது என்னைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பியது எதற்காக.?"
பதிலில்லை.
முத்துநகை சிரித்தாள்.
கரிகாலன் விடவில்லை. - மீண்டும் கேள்வி கேட்டான்.
"மிகவும் ரகசியமாக ஏதாவது பேச வேண்டுமா? முத்துநகையையும் வெளியே அனுப்பி விடட்டுமா?"
இதற்கும் பதில் இல்லை.
முத்துநகை அதிர்ச்சி அடைந்தாள். அரசன் ஒற்றரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒற்றரின் விழிகள் அரசரையே நோக்கின. பட்டுத் திரைக்குப் பின்னாலிருந்த வீரர்கள் பாய்வதற்குத் தயாராக இருந்தார்கள். முத்துநகையின் கருவிழிகள் சுழன்றன. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒரே அமைதி! அந்த அமைதியில் தான் எவ்வளவு பயங்கரம்!
முத்துநகையின் பார்வை ஒற்றரை விட்டு நகராமல் அப்படியே நிலைத்து நின்றது. அவள் கண்கள் இருண்டு விட்டன. சிறிது நேரத்தில் எதிரே ஒன்றும் தோன்றவில்லை. உட்கார்ந்திருந்த ஒற்றன் கம்பீரமாக