உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 51 காட்சி- 14 மு. கருணாநிதி திருசங்கு வீடு. திருசங்கு: என் மானம், மரியாதை, மதிப்பு எல்லாம் மண்ணாகப் போய்விடும் வெளியிலே தெரிந்தால்! முத்தாயி - நீ செய்த காரியத்தை யாரும் மன்னிக்க மாட்டார்கள். முத்தாயி: மன்னிக்க வேண்டாம் அப்பா- மனதார ஆமோதித்துவிடுங்கள். திருசங்கு: என்னையா? என்னையா ஆமோதிக்கச் சொல்கிறாய்! கண்ணைத் திறந்துகொண்டு கள்ளிக் காட்டிலே நடந்துபோவதை எந்த அறிவு கெட்ட வனும் ஒப்புக் கொள்ளமாட்டான். முத்தாயி: கள்ளிக்காடல்ல அப்பா! காதற் சோலை! திருசங்கு: வாயை மூடு ! காதல் கீதல் எல்லாம் ஏட்டிலே இருக்க வேண்டிய எழுத்து! மடப் பெண்ணே, தரித்திர நாராயணனிடமா காதல் ! பால் வேண்டுமென்று பாம்புப் புற்றிலே கைவிடுவார் களா யாராவது? முத்தாயி: அப்பா! என் சுகமே உங்கள் சுகம்--என் சந்தோஷமே - உங்கள் சந்தோஷம் என்பீர்களே ; நீங்களா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். வாழ்வுக் கேற்றவனை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை கிடையாதா? திருசங்கு: உன் வாழ்வுக் கேற்றவனைத்தான் LOIT L மாளிகை கூட கோபுரத்தோடு தோர்ந்தெடுத்திருக்