உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 காட்சி 16] மு. கருணாநிதி 57 [அஞ்சல் மனை அஞ்சல் மனையின் அலுவலகம் பூட்டப் பட்டிருக்கிறது. அதன் திண்ணைப் புறமாக உள்ள அறையில் முத்தன் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவன் உள்ளத்தில் ஊடுறுவிப் பாய்ந்த வண்ணமிருக்கின்றன போலும்! அடிமைப் புழுதியிலே வீசியெறியப்பட்ட பழுதூர்! அந்தப் பழுதூருக்கு ஒரு பாளையக்காரன் ஊரைக் கோட்டைவிட்டவன் அந்த அடிமைத் தலைவனுக்கு சில அதிகாரம். அந்த அதிகாரத்திற்கு ஆணவ முத்திரை. உடலை ஓடாகத் தேய்த்து உழைத்திருக்கிறாள், என் அம்மா - அந்த அரண்மனைக்கு! அதற்கு ஒரு நன்றி - ஒரு விசுவாசம்! நன்றி காட்டாவிட்டாலும்-நன்மை செய்ய மனமில்லாவிட்டாலும் - நாச வேலைகளில் ஈடுபடாமலாவது இருக்கக் கூடாதா? அவர்களிடமும் வேலை கிடையாதாம் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலும் வேலை தரக்கூடாதாம். அந்த அரண்மனையிலே நான் ஒரு அடிமை! இல்லை - இப்போது அடிமை யில்லை. ஆனால் வாழ வகையற்றுப் போனவன். உலகில் பிறந்தவர்கள் எல்லாம் பழுதூரில்தானா வாழுகிறார்கள். வேறு இடமே கிடையாதா- வயிறு வளர்க்க ! வழிதேட! ஆனால் உலகை விடச் சிறப்புடைய என் முத்தாயி பழுதூரில்தானே வாழ்கிறாள் - அவளைவிட்டு நான் எங்கே போவேன்!" தனக்குள் பேசிக்கொண்டிருந் தான். முத்தா!" என்று ஒரு குரல் கேட்கிறது. பார்க்கிறான்; திருசங்கு எதிரே நிற்கிறான். மு "6 தன் திருசங்கு: பயப்படாதே முத்தா! முத்தன்: பயமென்ன, அரண்மனையிலே ஏதாவது புதிய ஆணை பிறந்திருக்கும்.