சிவகங்கையில் சுயமரியாதை மாநாடு
67
என்று கொடுப்பது விழலுக்கு இரைத்த நீராகி வருகிறது. அவர்கள் வாழக் கற்றுக் கொள்ளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டமும், வறியோர் எண்ணிக்கையும், பெருகுவதைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. நிற்க.
சிவகங்கை மாநாட்டில், குஞ்சிதம் அம்மையார் பேசிய பேச்சின் மற்றோர் பகுதி இதோ:
‘ஏனய்யா! அவர்களும்—சங்கராச்சாரி, பாதிரிகள், பண்டாரச் சன்னதிகள்— எங்களைப் போன்று, பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தானே! அவர்களும், ரிக்ஷா இழுத்து, அதனால் கிடைக்கும் கூலியைப் பெற்று வாழட்டுமே என்று தமிழ்நாட்டு வாலிபர்கள் கேட்கப் போகிறார்கள்.’
அந்த அம்மையார் மட்டுமல்ல; பல்லாயிரக் கணக்கானவர்கள், அத்தகைய நிலை தமிழகத்தில் உருவாகப் போகிறது என்று எண்ணினார்கள்: அதற்காகப் பாடுபட்டார்கள்; தியாகஞ் செய்தார்கள்.
எத்தனை பெரிய எதிர்பார்ப்பு! எத்தனை நம்பிக்கை!
சாணக்கியர் இராசகோபாலாச்சாரியார், புத்துணர்ச்சி வெள்ளத்தைத் திசை திருப்பி விட்டார்.பெரியாருடைய சுயமரியாதை சமதர்ம இயக்கத்தவர்களை, வேறு களத்திற்குப் பாய்ந்தோட வைத்து விட்டார். அந்நிலையில், தேவையற்ற, படிப்பில், பட்டுப் போகும் பருவத்தினருக்குக் கட்டாய இந்திப் பாடத்தைத் திணித்து, தமிழர்களை வலுச் சண்டைக்கு இழுத்து விட்டார். சமதர்ம நெடுஞ்சாலையில் விரைய வேண்டிய தமிழர் படை, இந்தித் திணிப்பைத் தடுக்கும் வழிக்குப் பாய நேர்ந்தது. அய்ம்பது ஆண்டுகளாகியும், அதிலிருந்து விடுபட்டு,சாதியொழிப்பு, சமதர்ம அமைப்பு, முதலிய பணிகளில், முனைய முடியாமல் தவிக்கிறோம். நிற்க.
சிவகங்கை மாநாட்டிற்கு மீண்டும் செல்வோம். அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு எஸ். இராமநாதன், தமது உரையில்:
‘சுயமரியாதை இயக்கத்தின் நேரிடையான இலட்சியம், மதங்கள் அழிய வேண்டும்; குருட்டு எண்ணங்களும் ,மூட நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். இதற்கு ஏதோ சில தொண்டர்கள்