72
பெரியாரும் சமதர்மமும்
ஒப்பாச்சாரங்களைக் கவனிக்காமல் இருந்தால், என்ன மூழ்கி விடப் போகிறது?
“கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ” என்னும் பொது உடைமை அறிக்கை எந்தக் கமிட்டியில் உருவானது? நாம் கவனிக்க வேண்டியவை வருமாறு:
எடுத்த காரியம் என்ன? அது சரியா? சரியல்லவா? அது முடியுமா? முடியாதா?’
இப்படிப் பதில் கூறிய தோழர். சிங்காரவேலர், சட்டமன்றங்களின் வழியாக நிறைவேற்றப்பட்ட சில நல்ல சீர்திருத்தச் சட்டங்களைச் சுட்டிக் காட்டினார்.
1. உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்தல்.
2. இந்து விதவைகளுக்குத் திருமண உரிமை வழங்கும் சட்டம்.
3. இந்து அற நிலைய சட்டம்.
4. குழந்தை மணத்தைத் தடுக்கும் சாரதா சட்டம்.
மேற்கூறியவைகளைப் போன்று சுயமரியாதை நோக்கங்களை, சட்டசபை வழியாகச் செயல்படுத்தினால் என்ன தீமை? என்பது தோழர் சிங்காரவேலரின் வாதம்.
அன்றையச் சூழ்நிலையில் நின்று பார்த்தாலும், இராமநாதனுடைய முதல் இரு குறைகள் பொருளற்றவை. புரட்சிகரமான சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கியவர்கள், அதற்காக மட்டும் கூடிய தெருக் கூட்டத்தவர்கள் அல்லர்; சுயமரியாதை இயக்கத்தின் நாடி நரம்புகளாக இயங்கிய, இன்னல் பல ஏற்ற, ஏற்க ஆயத்தமாக இருந்த பொறுப்புள்ள, சுயமரியாதை இயக்க முன்னணி வீரர்கள் என்பதை, அன்றையப் பொது வாழ்க்கையில் இருந்த எல்லாப் பிரிவினர்களும் அறிவார்கள்.
சமதர்மம் கூடாது என்று இராமநாதன் கருதியிருந்தால், அடிப்படைக்கே எதிர்ப்பு சொல்லியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டவர் அல்லர். எனவே, விதிமுறைகளில் பிழைகள் உள்ளன என்று அவற்றைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம். கொள்கை சரியென்று ஏற்று இருந்த அவர் எப்-