உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி 17 இந்து மார்க்கத்தின் மாசு துடைத்து, அதற்குப் புதிய மாண்பு ஏற்படுவதற்காகவும், அந்த மார்கத் தைச் சூதுக்கும் சுயநலத்துக்கும் ஆதிக்கத்துக்கும் சிலர் பயன் படுத்திக்கொள்ளும் கொடுமையை நீக்குவதற் காகவும், பாடுபட்டவர்களை, அந்த மதத்தைக் கெடுக் கிறவர்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டு, கேவல புத்தி படைத்தவர்கள், கருத்து வேற்றுமையைச் சாக்காகக் கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தைக் கையாண்டு, படுகொலைகள் பல செய்துள்ளனர் மதச் சீர்திருத்த வாதிகளின் வரலாறுகள் இத்தகைய சோகச் சம்பவங்களையே நிரம்பக் கொண்டவையாக இருக்கக் காணலாம். இந்து மார்க்கத்துக்கு அவர் செய்ய எண்ணிய திருத்தங்களை, மத வெறி கொண்டோரும், ஆதிக்கக் காரர்களும் விரும்பவில்லை. சிலகாலமாகவே, வடநாட்டிலே சில பத்திரிகை களில் காந்தியார்மீதும், அவர் சகாக்கள் மீதும், பலாத் கார வெறிச் செயல்களைத் தூண்டும் முறையிலேயே கூட எழுதப்பட்டு வந்தன. அவருடைய மாலைநேரப் பிரார்த்தனைக் கூட்டங் களிலே சென்று கலகம் விளைவிக்கவும், அவர் இந்து மார்க்கத்தைக் கெடுக்கிறார் என்று கூச்சலிடவும் செய் தனர். இரண்டோர் நாள், இந்தச் செயல்களின் காரண மாக அவருடைய பிரார்த்தனைக் கூட்டங்கள், நடை பெறாமலேகூடப் போயின. 2