உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை வழிகாட்டி மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெய ருடன், தென் ஆப்பிரிக்காவிலே, முரட்டு வெள்ளையர் களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடந்த காலத் திலும், நாட்டுத் தலைவராகி, பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின் போதும், சிறைச்சாலையிலேயும், நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத் துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும், அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்த போதும், வெறியன் வெடிகுண்டு வீசியபோதும், ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துக்களிலிருந்தும் அவர் தப்பினார். ஒவ்வோர் சமயமும் அவர் உயிருக்குப் பேராபத்து வந்துவிடுமோ என்று நாடு கலங்கிற்று. எதிர்பாராத ஆபத்து. எவரும் கனவும் கண்டிராத விதத்தில், ஏற்பட்டு அவர் உயிர் துறக்க நேரிட்டது. கயவனின் கைத்துப்பாக்கியினால்.