உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காண விரும்பிய நாடு 47 கண்ணீரை அர்ப்பணித்தனர் - அவர் காட்டிய வழிச் சென்று தீட்டிய சித்திரத்தைக் காண, இனிப் புதிய தோர் ஆர்வத்துடன், அனைவரும் ஒன்றுபட்டு பணி புரிய மக்களுக்கு நேர் வழி காட்டுவதும், ஒற்றுமைக் கான திட்டம் தீட்டுவதும், தலைவர்கள் கடமை. அவர் வாழ்க்கையில் ஓர் சம்பவம் 1893-வது ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் ஒரு வழக்குக்காகச் சென்றிருந்தார். தலைப்பாகையுடன் கோர்ட்டுக்குச் சென்றிருந்ததைக் கண்ட நீதிபதி தலைப் பாகையை அகற்றும்படி உறைத்தார். காந்தியடிகள் அங்ஙனம் செய்ய மறுத்துக் கோர்ட்டை விட்டு வெளி யேறினார். நீதிபதியின் செய்கையைக் கண்டித்துப் பத்திரிகைகளுக்கு எழுதினார். இன்னொரு சமயம், பிரிடேரியா என்னும் இடத் துக்கு முதல் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்தார். நிறத்திமிர் கொண்ட ஒரு வெள்ளையன், ஒரு போலீஸ் கான்ஸ்டேபிளின் உதவியைக்கொண்டு அவரை முதல் வகுப்பு வண்டியினின்றும் கீழே இறக்கிவிட்டான். இத்தகைய கொடுமைகளை, காந்தியடிகளுக்கு வெள்ளை யரின் நிறத்திமிரை ஒழித்துக்கட்ட உறுதி கொள்ளும் படிச் செய்தது. கடைசியில் வெள்ளையரின் ஆதிக்கமே இந்நாட்டில் இல்லாது ஒழிந்ததற்கு உத்தமரின் ஓயா உழைப்பே காரணமாயிற்று.