உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 இரத்தக் கண்ணீர் மாளிகையின் ஒரு அறையிலே மயக்கம் சிறிது தெளிந்து கண்விழிக்கிறாள் முத்தாயி ! அவள் விழிகளில் நீர்வீழ்ச்சிகள் கொட்டு கின்றன. பக்கத்திலேயிருக்கும் திருசங்கு, தன் கையிலே வைத்துள்ள ஆபரணங்களை அவளிடம் காட்டுகிறான். திருசங்கு: முத்தாயி-இவைகளைப்பார்! முத்தும் பவள மும் ரத்தினமும் வைரமும் பதித்திட்ட ஆபரணங் கள்! பளபளக்கும் பட்டாடை! ஜொலிக்கும் வைரம் ! - மதிப்பு வாய்ந்த ரத்தினம் !- பெண்ணே! இவைகள் எல்லாம்...... முத்தாயி: உங்கள் மானத்திற்குத் தரப்பட்ட விலை!- உங்கள் மகள் மீது வீசப்படும் வலை ! ழ முத்தாயி. அந்த ஆபரணங்களைக் கீ ே தட்டி விடுகிறாள். அவைகள் இறைந்து சிதறு கின்றன. திருசங்கு: சொல்வதைக் கேள்! முத்தாயி: எதுவும் சொல்ல வேண்டாம்! எல்லாம் விளங்கி விட்டது. சிப்பியே முத்தைக் கொண்டுவந்து சேற்றில் போடுகிறது. செந்தாமரைக் கொடியே, இதழ்களை உதிர்த்து எருமைக்குத் தருகிறது. திருசங்கு: அழகாகப் பேசுவது பெரிதல்ல. நீ இப்படிப் பேச காரணமாயிருக்கிற கல்வி, நான் பாடுபட்ட திரவியத்தால் கிடைத்தது உனக்கு - காதல் கீதல்னு கண்டபடி கத்துகிறாயே... அந்த முத்தன் னுடைய அழகைத்தான் காதலிக்கிறான். மிருக்கட்டும் - பாளையக்காரர் மகன் எந்த அழகுக் உன் ஞாபக