உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 படித்தறிந்து வேலை வாய்ப்புக்களில் அமர்ந்திருந்த குடும்பத்துப் பிள்ளைக்ளே தொடர்ந்து அந்த நல்வாய்ப்புக் களைப் பெறவும் பெறவும் அடித்தளத்துப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், கல்விக் கூடங்களில் நுழைய முடியாத நிலையில் அவதியுறவும் இருந்த கொடுமையை- விளக்கி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் (கம்யூனல் ஜி.ஓ.) எனும் புரட்சிகரமான கொள்கையை நிறைவேற்றிய பெருமை நீதிக்கட்சியினர்க்கு உண்டு. சுயமரியாதை இயக்கம் ஆண்டவன் பெயரால், மதம், சாதி, இதிகாச புராணங்களின் பெயரால் தாழ்த்தப்பட்டுக்கிடந்த மக்களை பீடுநடை போடச் செய்த சிறப்புக்குரிய இயக்க மாகச் சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது. நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறிய பிறகு, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்ப்பதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளையர் தந்த சிறப்புப் பட்டங்களைத் துறப்பது என்று சேலம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. திராவிடர் கழகத்தின் பணிகள், தேர்தலில் போட்டி யிடுவது என்ற நிலைக்கு முதலிடம் தராமல், சமுதாயப் புரட்சிக்கு முழுவதுமாக ஒதுக்கப்பட்டன. இந்தி எதிர்ப்புப் போர் அதே சமயத்தில் தமிழர்களின் மொழியையும், தென்னாட்டு மொழிகளையும், இந்தி மொழி ஆதிக்கத் திற்கு அடிமையாகாமல் காத்திடும் போராட்டமும் பெரியார், அண்ணா, முத்தமிழ்க் காவலர் விசுவநாதம், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தரபாரதியார்,