________________
போதும், காமராசர் வழியில் நின்ற உண்மைத் மேற்கொண்டார்கள். தொண்டர்கள் பழைய காங்கிரசிலேயே நிலைத்து நிற்போம் என்று வீர சபதம் மத்திய அரசைக் கலங்க வைத்த கோவை மாநாடு இந்த நிலையில், 1975 டிசம்பர் இறுதி வாரத்தில் கோவையில் தி. மு. கழகத்தின் மாநிலப் பொது மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்றது. பல லட்சம் மக்கள் கூடினர் அந்த மாநாட்டில்! -நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுதல். -தலைவர்களையும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல். தல். -பத்திரிக்கைத் தணிக்கையை உடனடியாக நீக்கு போன்ற தீர்மானங்கள், பல லட்சம் மக்களின் முன் னிலையில் நிறைவேற்றப்பட்டன. அப்போது தி. மு. க. பொருளாளராக விளங்கி இப் போது பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரை, சனநாயக்ச்சுடர் விளக்கை ஒவ்வொரு தமிழனின் கரத்திலும் ஏற்றிவைத்தது என்றால் அதுமிகை யன்று. அன்றைய பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ் செழியன், இந்திராவின் சர்வாதிகாரத் திட்டங்களை ஆயிரம் ஆதாரங்களுடன் விளக்கியதோடு, இன்று காந்தி யும்-நேருவும் உயிரோடு இருந்தால் அவர்களையும் இந்திரா மிசாவில் கைது செய்து இருப்பார் என்று குறிப்பிட்