உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

47 களில் ஒருவரோ பங்குகொள்ள அழைக்கப்படுவது வழக்கம். கழகம் நெருக்கடிநிலையை எதிர்த்தது என்பதற்காக, கழக அமைச்சர்களில் யாரையும் விழாவிற்கு அழைக்காமல் தங்கள் குறுகிய மனப்பான்மையை அன்றைய இந்திரா அரசு புலப்படுத்தியது நாட்டுக்கு! 1975 ஜூன் திங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத் தப் பட்டபோது, காமராசருடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்துத் தீர்மானம் போட்டவர்கள், இந்திராவைச் சர்வாதிகாரி என்றும், சண்டாளி என்றும் தங்கள் ஏடுகளில் எழுதிய, மிக முக்கியமான பழைய காங்கிரஸ்காரர்கள்- இப்படிப்பட்ட புள்ளிகள் சிலர், திடீரென இந்திராவை இந்தியாவின் ஆதிபராசக்தி என்று வர்ணிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் அந்த முடிவுக்குக் காரணம் எதுவாக இருக்க முடியும்? இந்திராவின் கை ஓங்கி யிருந்தது. காமராசர் மறைந்துவிட்ட காரணத்தால் பழைய காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் செல்வாக்கு வளர முடியாது. கொள்கைப் பிடிப்பின் காரணமாகப் பழைய காங்கிரசி லேயே ஒட்டிக் கொண்டிருந்தால் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வளம் குன்றிப்போய்விடும்; அல்லது குந்தகப் பட்டுவிடும். -தன்னலவாதிகளுக்கு இயற்கையாக எழக்கூடிய மன அரிப்புதான்; அவர்கள் கூறிவந்த கொள்கைகட்கு கடல் அரிப்பாக மாறிவிடுகிறது என்பதை எத்தனையோ பேரு டைய வாழ்க்கையில் காணமுடிகிறதல்லவா? இந்திரா காங்கிரசில் பழைய காங்கிரசை இணைக்கும் முயற்சி, பலமாகவும், மூர்க்கத் தனமாகவும் - இச்சகம் பேசியும், அச்சமூட்டியும் நடைபெற்ற