________________
களை மிரட்டி, உருட்டி இந்திரா காங்கிரசில் இணைத்து விடலாம் என்று கருதினர். அதற்குத் தி. மு. க. அரசுதான் தடையாக இருக்கிறது என்று விரிவான பிரச்சாரத்தையும் செய்தனர். 1975 நவம்பரில் நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் இந்திராகாந்தி, தமிழ்நாடு அரசின் மீது குறைகளைக் கூறி யும், கடுமையான முறையில் விமர்சனம் செய்தும்நாடாளு மன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறினார். தி.மு.க. அரசு, இந்திரா கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது. இந்தியப் பிரதமரான இந்திராவும், தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பில் இருந்த நானும், மாறிமாறி ஒருவருக் கொருவர் பதில்களைக்கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்திராவுடன் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே கருணாநிதி முழுகிக்கொண்டிருக்கிறார்' என்று கேலியாகப் பேசினார். இந்திரா அரசின் கீழான மனப்பான்மை கழக ஆட்சியின் பலமான முயற்சியால் மத்தியஅரசின் சார்பில் சென்னையில் அமைந்த "டெலிவிஷன்” நிலைய வேலைகள் முடிவடைந்துவிட்டன. அதன் திறப்பு விழா விற்கு என்னையோ அல்லது தமிழக அமைச்சர்களில் ஒரு வரையோகூட அழைக்காமல், மத்திய அமைச்சர் திரு. சுக்லா அவர்கள் வந்து, டெலிவிஷனைத் தொடங்கி வைத் தார். பொதுவாக மத்திய அரசு சார்புடைய விழாக் களுக்கு அந்தந்த மாநில முதல்வரோ, அல்லது அமைச்சர்