உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 முதலமைச்சர் எம்.ஜி.ஆர். "நான் மாத்திரம் அண்ணாவிற்குத் தம்பியாக இல்லாவிட்டால் தி.மு.கழ கத்தை இந்நேரம் தடை செய்திருப்பேன்" என்று பேசி இருக்கிறார். இதிலிருந்தே அவர் அண்ணாவிற்குத் தம்பி அல்ல என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார். தடை செய்ய வேண்டும் என்பது அண்ணாவின் வாயிலிருந்து என்றைக்கும் வராத வார்த்தை. அவரு டைய இதயத்திலே அரும்பிடாத சொல் இது. ஜனநாயகத்தின் காவலர் அண்ணா. எல்லாக் கருத் துக்களும் மோதட்டும்; எல்லா கொள்கைகளும் கலக் கட்டும்; கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளலாம், அதுவே ஜனநாயகம் என்று கருதுகிற எளிதான வாதங்களைச் சந்திக்கத் திறனற்ற எம்.ஜி. ஆரைப்போல, தடை செய்வேன் என்று சொல்லி இருக்க மாட்டார். அண்ணா அண்ணாவிற்குத் தம்பியாக இருக்கின்ற காரணத் தாலேதான் தி.மு.கழகத்தை தடை செய்யவில்லை என்கின்ற எம். ஜி. ஆரைப் பார்த்து நான் கேட்கிறேன்; வேதனையோடு கேட்கிறேன். இங்கு பேசிய பேராசிரியர் அவர்கள் “தி. மு. கழகத் தைத் தடை செய்தால் அதன் காரணமாகக் கிளம்பு கின்ற எதிர்ப்புக்கனல் அ.இ.அ.தி. மு. க. வையே அழித்துவிடும்" என்று எச்சரித்தார். நான் அப்படிக் கூட குறிப்பிட விரும்பவில்லை. தி.மு.கழகம் என்கின்ற ஒன்று இருக்கின்ற காரணத் தாலேதான் இன்றைக்கு அ. இ. அ. தி. மு. க. இவ்வளவு நாள் வாழ முடிகிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.