உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25 தி.மு.கழகம் இருக்கின்ற இன்றைக்கு அ. இ. அ. தி. மு. க. வினுடைய காரணத்தாலேதான் தலைமை வாழ முடிகிறது; உலாவர முடிகிறது. அதை அவர் மறந்து விட வேண்டாம். ஒளவையார் பாடியதாக ஒரு பாடல் உண்டு. "யாரை யடா சொன்னாய்?" என்று! அதைத்தான் நான் எம்.ஜி. ஆரைப் பார்த்துச் சொல்ல விரும்புகிறேன். யாரைப் பார்த்துச் சொல்கிறீர்கள். தி.மு. கழகத்தைத் தடை செய்யும் ஆற்றல் உண்டு என்று! ஒன்றை எம். ஜி. ஆர். புரிந்து கொள்ள வேண்டும். மாநிலக் கட்சியைத் தடை செய்ய ஒரு மாநில அரசுக்கு உரிமை உண்டா என்பதை அவர் சட்ட ஆலோசகர் களைக் கலந்து பேசுவது நல்லது. அதைக்கூட மத்திய அரசுதான் செய்ய வேண்டும். ஒருவேளை மத்திய அரசுக்கு எம். ஜி. ஆர். பரிந்துரை செய்து தி.மு.கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார் போலும்! அந்த நன்னாளை பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! நான் தி.மு.கழகம் தடை செய்யப்படுமேயானால், அந்த நாள் தான்- எம்.ஜி.ஆரின் சிபாரிசுக்கு இந்திராகாந்தி இணங்கு வார்களேயானால், அந்த நாள்தான்- என்று அண்ணா ஒரு காலத்தில் சொல்லி பிறகு வேண்டா மென்று விட்டு விட்ட தமிழ்நாடு தமிழருக்கே ஆகிற நாள்- என்பதை எம். ஜி. ஆர். மறந்துவிட வேண் டாம்! ஆசை ஒருவேளை அவருக்கே அப்படி மனதில் ஒரு தோன்றி - தமிழ்நாடு தமிழருக்கே ஆகட்டுமே என்ற