உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 ஆசை தோன்றி இப்படி ஒரு சூழ்ச்சித் திட்டத்தை நமக் குச் சாதகமாக எம்.ஜி.ஆர். வகுத்திருக்கிறாரோ என்னவோ; எனக்குத் தெரியவில்லை! ஒன்றை,கட டந்தகால வரலாற்று நிழலில் நின்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத் தப்பட்ட போது- நெருக்கடி நிலை இருந்த நேரத்தில் ஜனநாயகம் பொசுங்கிக் கருகிய நேரத்தில்-ஜெயப் பிரகாஷ் நாராயண் போன்ற தேசத் தலைவர்கள் எல்லாம்- இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய அந்த வீரத் தியாகிகள் எல்லாம் சிறைச்சாலையிலே அடைபட்ட நேரத்தில் தமிழ் நாட்டிலே ஆளுங் கட்சியாக இருந்த தி.மு.கழகம், செயற்குழுவைக் கூட்டி, நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தது. இந்திரா காந்திக்கு அறிவுரை கூறியது. ஆத்திரமடைந்த இந்திரா காந்தி அம்மையார், ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு தி.மு.கழக ஆட்சியைக் கலைத்தார்கள். ஆட்சி கலைக்கப்பட்ட பின் அம்மையார், வடபுலத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது மாநிலக் கட்சிகளுக்கு இனி இந்தியாவில் என்று அச்சுறுத்தினார்கள். 66 இடமில்லை ஓம்மேத்தா என்ற மத்திய அமைச்சர் "தி.மு.கழ கத்தை நீண்ட நாள் வாழவிட மாட்டோம்; தி.மு.கழகம் தடை செய்யப்படும் காலம் வரும்; ஏனென்றால் மாநிலக் கட்சிகளுக்கு எதிர் காலம் இல்லை; எனவே அவர்கள் வாலாட்ட வேண்டாம்" என்று பேசினார். அந்த காலத்தில் - பேராசிரியர் மறந்திருக்க மாட்டார்; நண்பர் சாதிக் மறந்திருக்கமாட்டார்- கழகத்திலேயே மேல் மட்டத்திலே இருந்த சிலர், நாவலரைப் போன்ற