உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த ஊழல் விசாரணைக் குழு வுக்கு தலைவர். உறுப்பினர்கள் யார்? எம். ஜி. ஆரால் நெக்லஸ் லஞ்சம் வாங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நெடுஞ்செழியன். மற்றோர் உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜப்பானிலிருந்து கப்பல் வாங்கியதில் கொள்ளையடித்த தாக இதே எம். ஜி. ஆருடைய கட்சி அவர்மீது புகார் கொடுத்தது உண்டு. இன்னொருவர் கே.ஏ. கிருஷ்ணசாமி, அவர் வீடு வாங்கிய விவகாரம் அவரது அச்சகம் அரசாங்க புத்த கங்களை அச்சடிக்கின்ற விவகாரம் இந்த ஊழல்களுக் கெல்லாம் அவர் இன்னும் பதில் சொல்லவில்லை. காளிமுத்து ஒரு உறுப்பினர். அவரைப் பற்றி ஏராள மான விவகாரங்கள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எனவே இந்த ஊழல் மன்னர்களெல்லாம் சேர்ந்து ஊழல் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துக் கொண்டு விசாரிக்கப் போகிறார்களாம். இங்கு பேசிய பலரும் இது லஞ்ச ஊழல் ஆட்சி என்பதை விளக்கி பல ஆதாரங்களை அள்ளி அள்ளிப் போட்டார்கள். நான் கேட்கிறேன். இவைகளையெல்லாம் அந்த ஊழல் விசாரணைக் குழுவுக்கு நாங்கள் தந்த புகார்கள் என்று எடுத்துக் கொண்டு விசாரிக்கத் தயாரா? தயார் என்பார் எம். ஜி. ஆர். சட்டப்பேரவையிலே நானும் நண்பர் கிருஷ்ண மூர்த்தியும் மேலவையில் வீராசாமியும் நூற்றுக்கணக் கான ஆதாரங்களுடன் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு களுக்காகப் போடப்பட்ட ராமபிரசாத்ராவ் கமிஷன் என்ன ஆயிற்று?