உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 சான்று: கம்பராமயணத்தில் அகலிகைக்கதை, இரா . மன் கால் துகள் பட்டுக் கல்வடிவம் உயிர்பெற்று எழ, அது- கண்டு. காரணம் வினவி நின்ற இராமனுக்கு விசுவாமித்திரர் அகலிகை வரலாற்றைக் கூறுவதாக அக்கிளைக்கதை மூலக் கதையுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. 6.2.2 பாத்திரத் தொடர்பு: சில கிளைக்கதைகளில் காப்பியத் தலைமை மாந்தரோ காப்பியத் துணை மாந்தரோ இடம் பெறுவர். இதனால் மையக் கதையும், கிளைக் கதையும் இயல்பாகத் தொடர்பு படுத்தப்பட்டுவிடுகின்றன. சான்று: சிலம்பில் தேவந்திகதை துணைமாந்தர் கதை யாகவும் 38, கண்ணகி கதை தலைமை மாந்தர் கதையாக வும்' அமைந்திருக்கின்றன. 6.2.3 பாத்திரக் கூற்றுத் தொடர்பு: காப்பியத் தலைமைப் பாத்திரங்களோ. துணைப் பாத்திரங்களோ சொல்வதாய்ச் சில கதைகள் அமைந்திருக் கும். மையக்கதையில் சில நிகழ்ச்சிகளை நடத்துவிக்கவோ அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தின் பண்பை உயர்த்துவ- தற்கோ இக்கிளைக்கதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சான்று: சிலம்பில் குரங்குக்கை வானவன் கதை காப்பி- யத் துணைமாந்தரான கவுந்தியடிகளால் சொல்லப்படுவ- தால், மையக்கதையுடன் அக்கிளைக்கதை இயல்பாக ஒன் றித்திகழ்கிறது". 6.2.4 காப்பியத்தில் இடம்பெறும் ஊர், ஆறு சம்பந் தபட்ட தொடர்பு: காப்பியக் கதை நடப்பதாகக் கூறப்படும் நகரம் அல் வது அதன் ஆறு, சோலை போன்ற சிறப்பு மிகுந்த இடங்- களின் கதையாகச் சில கிளைக்கதைகள் அமைந்திருக்கீன்றன.