________________
18 போலத் துணைநிற்க வரும் கதைகளை ஊன்று கிளைக்கதை- கள் என்று கூறலாம். இக்கதைகள் பெரும்பாலும் எடுத்துக்- காட்டுக் கதைகளாகலே அமைந்திருக்கும். இதன் பயன் காப்பியத்தில் அக்சூழலிலேயே முடிந்துவிடும். காப்பியத்தில் இவ்வகைக் கிளைக்கதையின் பங்கும் மிகக் குறைந்ததே. சான்று: 1. குரங்குக்கை வானவன் கதை 2. பொற்கைப் பாண்டியன் கதை இலம்பில் குரங்குக்கை வானவன் கதை அடைக்கலச் சிறப்பு பேசுவதற்காக எடுத்தாளப்பட்டு, அதன் பயன் மாதர் ண்ணகிை அடைக்கலம் ஏற்றுக் கொண்ட சூழலிலேயே முடிந்து விடுகிறது. அதுபோல், பொற்கைப் பாண்டியன் கதை, பாண்டியர் பெருமையை எடுத்துக்காட்ட மட்டுமே பயன்படுகிறது. 8.0 தன்மையை ஒட்டி வகைப்படுத்தல் கிளைக் கதைகளை அவற்றின் தன்மையை ஒட்டி உபகதை, தனிக்கதை என இரண்டாக வகைப்படுத்த லாம். டாக்டர் ச. வே. சுப்பிரமணியம் இப்பிரிப்புமுறை - யையே துணைக்கதை, தனிக்கதை எனத்தன் நூல்களில் எடுத்துக் காட்டியுள்ளார், 41 உபகதை என்பது காப்பியப் வாத்திரங்களுடன் தொடர்புடையது. தனிக்கதை என்பது எடுத்துக்காட்டுக் கதையாக வரும். இது, காப்பியப் பாத் நிரங்களுடன் கூற்றளவில் மட்டுமே தொடர்புடையதாக அமைந்திருக்கும். சான்று: உபகதை: தேவந்தி கதை தனிக்கதை: குரங்குக்கை வானவன் கதை 7.0 இணைவை ஒட்டி வகைப்படுத்தல் காப்பிய மையக்கதையுடன் கிளைக்கதை இணைந்துள்ள பாங்கை ஒட்டி.