________________
விக்டோரியா அருவி 43 கொண்டே பல நூல்களைப் படித்துவந்தார்; இரவில் எட்டு மணியளவில் பஞ்சாலையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் நெடுநேரம் படிப்பது வழக்கம். கல்வி கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட தந்தையார், அவரைக் கிளாஸ்கோ பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்த்தார். லிவிங்ஸ்டன் தம் வறிய நிலைக்கு ஏற்பச் சிக்கனமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு மிகுந்த ஊக்கத்துடன் படிக்கலா னார்; கோடை விடுமுறை விடப்பட்டதும், பஞ்சாலை யிற் சேர்ந்து வேலை செய்தார்; இங்ஙனம் வேலை செய்து அடுத்த ஆண்டு செலவிட்டுப் படிப்பதற்கு வேண்டிய பொருளைச் சேர்த்துக்கொண்டார். இவ் வாறு அவர் பல ஆண்டுகள் உழைத்துப் படித்து மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். பணி செய்ய விருப்பம் வெளி நாடுகளில் மருத்துவராக இருந்து மக்கள் உடலினைக் குணப்படுத்துதல் வேண்டும், கிறிஸ்துவ சமய அறிவை ஊட்டி மக்களது அகத்தையும் தூய்மை செய்யவேண்டும் என்பது லிவிங்ஸ்டனது அவாவாக இருந்தது. இவ்விரண்டிற்கும் அவர் தகுதியுடைய வரே என்பதை நன்கு உணர்ந்த இலண்டன் கிறிஸ்துவத் தொண்டர் கழகம், அவரை ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பாதிரியாராக ஆப்பிரிக்கா விற்கு அனுப்பியது. தென் ஆப்பிரிக்காவில் டேவிட் லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவை நோக்கிக் கப்பலில் செல்லும்பொழுதே, “தென் ஆப்