________________
44 துணைப் பாடம் பிரிக்காவில் கரையோரப் பகுதியையே நம்மவர் அறிந் துள்ளனர். நான் தென் ஆப்பிரிக்காவின் உட்பகுதி களையும் சென்று காணவேண்டும்; அப்பகுதிகளில் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் அநாகரிக நிலையில் வாழ்கின்றனர் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்- கிறேன். அவர் தம் அகத்தையும் புறத்தையும் தூய்மை செய்தல் எனது கடமை," என்று மனவுறுதி கொண்டார். இவ்வுறுதியான டேவிட் லிவிங்ஸ்டன் தென் ஆப்பிரிக்காவில் குருமன் என்னும் இடத்திலிருந்த கிறிஸ்துவத் தொண்டர் கழகத் தலைமை நிலையத்திற்குச் சென்றார்; அங்குச் சில நாட்கள் தங்கினார்; அப்பொழுது அங்கிருந்த * டாக்டர் மொப்பட் என்பவர் மகளாரை மணந்து கொண்டார். தொண்டின் தொடக்கம் எண்ணத்துடன் சில நாட்களுக்குப் பின்பு (1852இல்)லிவிங்ஸ்டன் தம் மனைவியாருடன் பிரயாணத்தைத் தொடங்கினார். சில பொதிமாடுகளும், பண்டங்கள் வைக்கும் வண்டி யுமே அவரிடமிருந்த சாதனங்கள். பொதிமாடுகள் ஆமை வேகத்தில் நடந்தன. அவர் பலமாதங்கள் வெயிலிலும் மழையிலும் வழிநடந்து வடக்கு நோக்கிச் சென்றார். வழியில் பெரும் பாலை நிலப்பகுதி அவரை வரவேற்றது. அதுவே + கலஹாரீப் பாலைவனம் எனப் படுவது. அப்பாலைவனத்தில் மணற் குன்றுகளும், பள்ளங்களும் காணப்பட்டன. பசுமை என்பது மருந்துக்கும் கிடைக்காத அக்கொடிய பாலைவனத்தை லிவிங்ஸ்டன் பொறுமையையும் மன ஊக்கத்தையும் *Doctor Moffut † Kalahari