________________
விக்டோரியா அருவி 45 கவசமாகக் கொண்டு கடந்தார். அருளே உருவாக வந்த அவரிடம், கொடுமையே உருக்கொண்டாற் போன்ற பாலைவன மக்கள் பேரன்புடன் நடந்து கொண்டனர்; அவருக்கு உதவியாகவும் இருந்தனர். பின்னர் லிவிங்ஸ்டன் பெச்சுவானா என்னும் நாட்டை அடைந்தார். அப்பகுதியை ஆண்டுவந்த பழங்குடி மன்னன் அவரை வரவேற்றான். லிவிங்ஸ் டன் அப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து பல கால் வாய்களை வெட்டி, ஆற்று நீரைக் கொண்டு வந்து நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யும் முறையினை அப்பகுதியிலிருந்த மக்கட்குக் கற்பித்தார். இவ்வாறு அவரது தொண்டு தம் நாட்டுக்கு நலன் விளைப்பது கண்ட பழங்குடி மக்கள், அவரைத் தேவ தூதராகக் கருதினர்; அவரிடம் அன்பும் மரியாதையும் காட்டினர். இங்ஙனம் அவர்களிடம் மதிப்புப் பெற்ற பிறகே, லிவிங்ஸ்டன் அவர்களிடைக் கல்விப் பிரசாரமும் சமயப் பிரசாரமும் செய்யலானார். அந்நாட்டு மன்ன னும், குடிகள் பலரும் கிறிஸ்துவர் ஆயினர். லிவிங்ஸ் டன் அக்கொற்றவன் ஆதரவில் அப்பகுதியில் சில ஆண்டுகள் கழித்தார். அங்கு அவருக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. வடக்கு நோக்கிப் பயணம் அதுவரையில் வெள்ளையர் எவரும் கண்டிராத உள்நாட்டுப் பகுதிகளைக் காண வேண்டு மென்னும் அவா லிவிங்ஸ்டனை வடக்கு நோக்கிச் செல்லத் தூண்டியது. அதனால் அவர் தம் குடும்பத்துடன் வடக்கு நோக்கிப் புறப்பட்டார். அவருடைய பொருள்கள் பல எருதுகள்மீது கொண்டு செல்லப்