________________
குற்றால அருவி 93 பண்டைப் பாண்டிய நாடு. பாண்டிய நாட்டில் கி.பி. 97ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக இருந்துவரும் சிவத்தலங்கள் பதினான்கு. அவற்றுள் குற்றால அரு விக்கு அண்மையிலுள்ள குற்றாலம் என்னும் சிவத் தலம் ஒன்றாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை அழகுக்கு இடையில் அமைந் துள்ள காரணத்தால் மிகச் சிறப்புப் பெற்றுள்ளது. இத்தலம் திருநெல்வேலி மாவட்டத்துத் தென்காசித் தாலூகாவில் தென்காசிப் பதிக்குத் தென்மேற்கே மூன்றரைக் கல் தொலைவிலுள்ளது: திருவனந்தபுரம் புகைவண்டிப் பாதையில் உள்ள தென்காசிப் புகை வண்டி நிலையத்திலிருந்து தென்மேற்கே இத்தலம் இருக்கின்றது. பல திசைகளிலிருந்தும் இத்தலத் திற்கு வரச் சிறந்த பாதைகள் அமைந்துள்ளன. குற்றாலத்திலிருந்து ஐந்து கல் தொலைவு வரை குற்றாலத்தை நோக்கி வரும் பாதைகள் இருபுறங்களி லும் மரங்கள் வளரப்பெற்றவை; கண் கவரும் தோற் றம் அளிப்பவை. பாதைகளின் இருபுறங்களிலும் மரங்கள் செறிந்த சோலைகளும், பச்சைக் கம்பளம் பரக்கப் போர்த்தாற் போன்ற வயல்களும், நறுமண மலர்களை நல்கும் நந்தவனங்களும், நீர் நிலைகளும் காண்பவர் மனத்தைக் கவரும். பாதையிலுள்ள மரக் கிளைகளில் குரங்குகள் தாவிக் குதித்து விளையாடும். குற்றாலத்தை நோக்கிச் செல்லச் செல்ல, இயற்கை அழகு படிப்படியாக மிகுந்து செல்வதைக் காணலாம். அருவியை வழங்கும் மலைவளம் உண்டாம். குற்றால அருவியைத் தன்னகத்தே பெற்றுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மேற்கே பத்துக்கல்