உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 92 V குற்றால அருவி 1. குற்றால அருவி அருவியின் சிறப்பு இதுகாறும் கூறப்பெற்ற உலகப்புகழ் பெற்ற நயாகரா, விக்டோரியா, சிவசமுத்திர அருவிகள் விழு கின்ற இடங்கள் காட்சிக்கு இனியவை; ஆயின், அவை மக்களுக்கு உடல் நலத்தையும் மன அமைதி யையும் தருவனவாக அமையவில்லை. குற்றால அருவியோ எனின், தன்பால் நீராடும் மக்களுக்கு உடல் நலத்தை அளிக்கின்றது; சுறுசுறுப்பை மிகுவிக் கின் றது; பல நோய்களைத் தீர்க்கின்றது; இப்பண்பு களால் ஐரோப்பியர்களையும் இந்தியர்களையும் தன்பால் இழுக்கின்றது. இவை அனைத்துக்கும் மேலாக அரு வியின் அடியில் பாடல்பெற்ற குற்றாலநாதர் என்னும்- சிவபெருமான் கோயில் பல நூற்றாண்டுகளாக இருந்து, மக்கள் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது. அருவியை வழங்கும் மலை பல நூற்றாண்டுகளாகத் தமிழ்ப் புலவர்களால் சிறப்பிக்கப்பட்டது. அதன் அடிவாரத்தில் உடல் நலம் பேணி மக்கள் வந்து இன் புறுதற்கேற்ற ஊர், பன்னெடுங்காலமாக அமைந் துள்ளது. இச்சிறப்புக்களை நோக்க, மேற்கூறப் பெற்ற மூன்று அருவிகளை விட, இக்குற்றால அருவி பல துறைகளில் சீரும் சிறப்பும் பெற்றதெனக் கூறுதல் மிகையாகாது. குற்றாலப் பதி இக்கால மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் சேர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/95&oldid=1693054" இலிருந்து மீள்விக்கப்பட்டது