உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 91 வாய் வழியாகவோ அனுப்பப்படும். இப்பள்ளத்தாக் கின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி, பருவகாலத்தில் பெருகும் வெள்ளத்தைச் சேர்த்துவைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் பயன்கள் (1) ஹொன்னமராடு நீர்த்தேக்கம் ஐந்துலட்சம் கிலோவாட் உற்பத்திக்குப் போதுமான பத்தாயிரம் மில்லியன் கன அடி நீரைச் சேர்த்துவைக்க உதவும். (2) முன்னரே அமைந்துள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு ஆயிரத்து இருநூறடி உயரத்தி லிருந்து விழும் நீர், இப்புதிய திட்டத்தின் பயனாக, ஆயிரத்து நானூறு அடி உயரத்திலிருந்து விழும். முடிவுரை இங்ஙனம் மைசூர் அரசாங்கம் ஏறத்தாழ 1950இல் போட்டுள்ள இவ்விரு திட்டங்களும் இன்று செயலாற்றப்படுகின்றன. இத்திட்டங்கள் முடிவு பெறின், மைசூர் நாட்டின் கைத்தொழில் முன்னேற் றத்துக்கும், பயிர்த்தொழில் வளர்ச்சிக்கும், வீடுகளின் தேவைக்கும் வேண்டும் மின்சக்தி குறைவின்றி வழங் கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/94&oldid=1693053" இலிருந்து மீள்விக்கப்பட்டது