________________
90 துணைப் பாடம் அடி நீர் தாங்கிநிற்க வசதி இருக்கு மென்றும் அறிஞர் திட்டமிட்டுள்ளனர். அருகிலிருக்கும் மின் சார நிலையத்திலுள்ள உருளைகளைச் சுழற்றுவதற்கு இத்தேக்கத்திலிருந்து ஒரு திறந்த கால்வாய் வழி யாகத் தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அமைக்கப் படும் மின்சார நிலையம் தொடக்கத்தில் பதினைந்தா யிரம் * கிலோவாட் மின்சக்தியைத் தோற்றுவிக்கும். ஹொன்னமராடு திட்டம் ஹொன்னமராடு என்னும் இடம் ஜோக் மின் சக்தி உற்பத்தி நிலையத்திலிருந்து சராவதி ஆற்றின் கரையில் ஐந்து கல் தொலைவில் உள்ளது. இஃது இரண்டு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட குறு கிய பள்ளத்தாக்காக அமைந்துள்ளது. இருபத்தையா யிரம் மில்லியன் கன அடி நீர்கொள்ளும் ஹிரேபாஸ் கர் அணையிலிருந்து ஆற்றின் கீழ்ப்பகுதியில் மூன்று கல் தொலைவில் ஹொன்னமராடு நீர்த்தேக்கம் கட்டப் படும். நூற்று அறுபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு நீர்த்தேக்கம் இங்குக் கட்டப்படின், அதனில் ஒரு லட்சம் மில்லியன் கன அடி நீர் வைக்கலாம் என அறிஞர் மதிப்பிடுகின்றனர். இத்திட்டம் நிறைவேறக் கரெகல் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வணைக்கட்டு வழியே இப்போதுள்ள மின்சக்தியைத் தோற்றுவிக்கும் நிலையத்திற்குத் தேவையான நீர் திருப்பப் படும்; எஞ்சிய நீர் தல்கலேல் பள்ள த்தாக்குக்கு மலைக்குடைவு வழியாகவோ அல்லது திறந்த கால்
- Kilo Watt Hirebaskkar
†Honnemaradu Project § Karegal Talkalele தேக்கி