உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 89 தையும் தயாரித்தது. மேகதாடு திட்டத்துக்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகும் என்று அறிஞர் மதிப்பிட் டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மைசூர்-சென்னை எல்லைக்கருகில் இரண்டு சதுரக்கல் பரப்புடைய இடத்தில் இத்திட்டத்திற்குரிய நிலையம் நிறுவப்படும். 1924ஆம் ஆண்டு வரையிலும் சென்னை அரசாங் கத்துக்கும், மைசூர் அரசாங்கத்துக்கும் ஓர் உடன் படிக்கை ஏற்பட்டிருந்தது. அதன்படி சென்னை அரசாங்கம் மேகதாடு என்னும் இடத்தில் மைசூர் அரசாங்கம் மின்சக்தி எடுப்பதற்காக அவ்விடத்துக். காவிரி நீரில் தனக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுத் தது. ஆயின், இரு அரசாங்கங்களின் நீர்ப்பாசனத் தொடர்பான சில உரிமைகள் இரு அரசாங்கத்தின ராலும் ஒப்புக்கொள்ளப்பட்டன. சென்னை அரசாங் கத்துக்கு எவ்வளவு மின்சக்தி என்ன விலைக்குக் கொடுப்பது என்பது பற்றிப் பின்னர்ப் பேசி முடிவு. செய்துகொள்ளலாம் என்பதை இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால், மின்சக்தியைத் தோற்று விக்கும் உரிமை மைசூர் அரசாங்கத்துக்கே தரப் பட்டது. மின்சக்தி தோற்றுவிக்கும் நிலையத்துக்கு நீரை ஒழுங்குபடுத்தி அனுப்ப மேகதாடு அருவியின் மேல் பாகத்தில் ஒரு நீர்த்தேக்க சாதனம் அமைக்கத் திட்ட மிடப்பட்டிருக்கிறது. அந்த * நீர்த்தேக்கத்தை நூற் றைம்பது அடி உயரமாகக் கட்டவேண்டும் என்றும், அப்பொழுதுதான் பதினைந்தாயிரம் மில்லியன்

  • Reservoir

கன 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/92&oldid=1693056" இலிருந்து மீள்விக்கப்பட்டது