________________
88 துணைப் பாடம் மிக்க உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் ஆறுகளிலிருந்து நீரை எடுத்து வயல்களுக்கு அனுப்புவதற்காகப் பெரிய *நீரிழுக்கும் நிலையங்கள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நர்சிபூர் அருகில் நீரிழுக்கும் நி லையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஏறத்தாழ எழுநூறு சிற்றூர்களில் நில அளவு எடுக்கப்பட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு அரசாங்கத் தினிடம் அளிக்கப்பட்டன. அவற்றுள் சில சிற்றூர்த் திட்டங்கள் படிப்படியாக நடைபெற்றுவருகின்றன. சிற்றூர்களுக்குத் தேவைப்படும் மின் சக்தியைக் கொண்டுசெல்லும் செப்புக் கம்பிகள், அவற்றைத் தாங்கி நிற்கும் தூண்கள் முதலியவற்றை வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. 1917ஆம் ஆண்டுக்கு முன்பு முந்நூற்று அறுபது இடங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டிருந்தது; 1950ஆம் ஆண்டு முடிவில் நானூற்று அறுபத்தொன்பது இடங்கள் மின் வசதி பெற்றன. 1955க்குள் மேலும் ஐந்நூறு சிற்றூர்களுக்கு மின்வசதி அளிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. பங்களூரிலும் மைசூரிலும் உள்ள மின் சக்தி பெறும் நிலையங்களின் திறனை மிகுதிப்படுத்த அரசாங்கம் முனைந்து வேலை செய்கின் றது. †மேகதாடு திட்டம் காவிரி, ஷிம்ஷா மின்சக்தித் திட்டங்களால்மட்டும் மைசூர் நாட்டுக்குத் தேவைப்படும் மின்சக்தியை உண்டாக்க முடியவில்லை. எனவே, மைசூர் அரசாங் கம் மேகதாடு திட்டத்தையும் ஹொன்னமராடு திட்டத் *Pumping Stations † Mekedatu Project