உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவசமுத்திர அருவி 87 காவிரி மின்சக்தித் திட்டமும் இந்த ஷிம்ஷாத் திட்ட மும் படிப்படியாக வளர்ச்சியுற்று நாட்டு மக்களுக்கு மேற்குறித்த பல நலங்களை விளைவிக்கின்றன. பல வகை நிலையங்கள் மைசூர் அரசாங்கம் தன் நாட்டின் எல்லாப்பகுதி களுக்கும் பயன்படத்தக்க முறையில் மின்சக்தி *தோற்றுவிக்கும் நிலையங்கள் பலவற்றை அமைத் துள்ளது; இங்ஙனம் தோற்றுவிக்கப்படும் மின் சக்தியைச் சேர்த்து வைக்கும் நிலையங்களை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு சேர்க்கப்படும் மின் சக்தியைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பத்தக்க நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ளது; மின்சக்தியைப் பல இடங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் நிலையங் களையும் உண்டாக்கியுள்ளது; 1947 இல் தோற்றுவிக் கப்பட்ட மின்சக்தி ஒரு மடங்கு என்று கொண்டால், 1950இல் ஒன்றரை மடங்கு அளவுள்ள மின்சக்தி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடுகள் காலப்போக்கில் நாகரிகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், மின்சக்திக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி,சராவதி முதலிய ஆறுகளில் மிகுந்த அளவில் மின்சக்தியைத் தோற்றுவிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, இத் துறையில் வல்ல அலுவலர் பலர் வேலையில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

Generating Stations § Transmitting Stations Receiving Stations Distributing Stations

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/90&oldid=1693050" இலிருந்து மீள்விக்கப்பட்டது