________________
C €96 துணைப் பாடம் 1935ஆம் ஆண்டில் டாக்டர் வைட் என்னும் அறிஞர் இம் மலைப் பகுதியைச் சுற்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து, "இம்மலைப்பகுதியில் இரண்டா யிரம் வகை மலர்ச் செடிகளும், இரண்டாயிரம் வகை பச்சிலைச் செடிகளும் மூலிகைகளும் கிடைக்கின்றன," என் று கணக்கெடுத்துக் கூறியுள்ளார். குற்றால மலைப் பகுதியில் ஆரஞ்சு, தென்னை, கமுகு, வாழை, மா, பலா, கொய்யா, எலுமிச்சை முத லிய மரங்கள் பயிராகும் தோட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன. பல தோப்புக்கள் தனிப்பட்டவர்க்கு உரியவையாயும், சில அரசாங்கப் பாதுகாப்பிலும் இருக்கின்றன. குற்றால மலையின் கவின் பெறு வனப்பும், கண் கொள்ளாக் காட்சியும் காண்பவர் ஒவ்வொருவரையும் கவிஞராக மாற்றவல்லவை. உண்மைப் புலவன் இத னைக் காண்பானாயின், இவ்வளம்படு வனப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தன் அநுபவங்களை உயிர்ப்பள்ள கவிகளாகப் பொழிவான் என்பதில் ஐய மில்லை. உலகப்பற்றை ஒழித்து மனத்தை ஒரு நிலைப் படுத்தி யோக சாதனை செய்வதற்கு இது மிகப் பொருத்தமான இடமாகும். இம்மலை வளத்தின் சிறப் பினைத் திருக்குற்றாலத் தல புராணத்திலும் திருக்குற் றாலக் குறவஞ்சி என்னும் நூலிலும் படித்து மகிழலாம். சிற்றாறு: தோற்றமும் போக்கும் குற்றால அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு என்பது. இந்த ஆறு திரிகூட மலையில் ஓரிடத்தில் தோன்றிக் கீழ் நோக்கி வருகின்றது;