உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 துணைப் பாடம் தொலைவும் ஒரே வீழ்ச்சியாய் விழாமல், இடையில் முன்னோக்கியுள்ள பாறையில் விழுந்து, அதனால் பொங்கிப் பரந்து விரிந்து கீழ்நோக்கி விழுகின்றது. இங்ஙனம் பொங்கி மேலெழும் காரணத்தால் இத் துறை பொங்குமா கடல் எனப் பெயர் பெற்றது. கீழே விழுகின்ற அருவி வற்றாத வட அருவி எனப் பெயர் பெற்றுள்ளது. இந்த அருவியின் தோற்றமும் ஓசையும் உள் ளத்தை ஈர்ப்பவை; உலகக் கவலைகளைச் சிறிதளவு' மறைத்து மன அமைதியைக் கொடுத்து, உயர் நிலை யில் புகுத்த வல்லவை. ஐந்தருவி குற்றால அருவியிலிருந்து ஐந்தருவிப் பாதை யில் மலைமீது அரைக் கல் தொலைவில் சிற்றருவி என்னும் பெயர் கொண்ட ஓர் அருவி இருக்கின்றது. அதற்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் சிற்றாற் றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகின்றது. அதற்கு அவ்விடத்தில் ஐந்தருவி என்பது பெயர். ஆற்று நீர் ஐந்து அருவிகளாக விழுகின்ற காட்சி விழிகட்கு விருந்தளிக்க வல்லது. அங்குச் செல்லும் மக்கள் தங்கியிருக்க வசதியாய் ஒரு பெரிய பாறை. பந்தற் கூரைபோல் அமைந்துள்ளது. அருவியின் கீழ், மக்கள் வழுக்கி விழாமல் நீராட வசதி செய்யப் பட்டுள்ளது. மற்றோர் அருவி குற்றாலத்திற்குக் கிழக்கே முக்கால் கல் தொலை வில் மலைப்பகுதியிலிருந்து நீரோட்டம் அருவியாக விழுகின்றது. இதற்குப் பாசுபத் சாஸ்தா அருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/102&oldid=1693062" இலிருந்து மீள்விக்கப்பட்டது