________________
குற்றால அருவி 111 சோழ வேந்தரும், பாண்டிய மன்னரும் இ கோவிலில் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் முதலியவற்றை அமைத்துள்ளனர். கோவிற்பகுதி களைப் புதுப்பித்துள்ளனர். இதுகாறும் கூறப்பெற்ற விவரங்கள் இக்கோவிற் கல்வெட்டுக்களிலிருந்து உணரப்படுவனவாகும். பின்வந்த சொக்கம்பட்டிக் குறுநில மன்னர்கள் பல திருப்பணிகளைச் செய்துள் ளனர். நகரத்தார் மரபைச் சேர்ந்த தேவகோட்டைச் செட்டியார்கள் பெரும்பொருள் செலவிட்டுக் கோவில் திருப்பணியைச் சிறப்புற நடத்தி முடித்தனர். பூசைகளும் விழாக்களும் குற்றாலநாதருக்குச் சித்திரைத் திங்கள் வசந்த விழாவும், புரட்டாசித் திங்கள் நவராத்திரி விழாவும், ஐப்பசித் திங்கள் கந்தசஷ்டி விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. விழாக்காலத்தில் இறை வனும் இறைவியும் ஓவிய அம்பலத்தைச் சுற்றி உலா வருதல் வழக்கம். விழாக்காலங்களில் உலா முடிந் ததும் திருக்குற்றாலம் சந்நிதி பிரபந்த வித்துவான் மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் மரபினர் கவி பாடு வர். அவர்களுக்கு இன்றும் கோவில் மரியாதை செய் யப்படுகின்றது.'விழா நாட்களில் திருக்குற்றாலத்தில் இன்னிசை அரங்குகள், திருமுறை ஓதுதல், சைவப் பெருமக்களின் சொற்பொழிவுகள் ஆங்காங்கு நடை பெற்றவண்ணம் இருக்கும். இங்ஙனம் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளைக் குற்றாலத் தலபுராணத்தில் பரக்கக் காணலாம்.