________________
112 3. குற்றாலம் பற்றிய இலக்கியம் திரிகூட ராசப்பக் கவிராயர் முன் சொல்லப்பட்ட திருஞானசம்பந்தர் முதலிய சமய குரவர் குற்றாலம் பற்றிப் பதிகம் பாடினரேயன்றி இத்தலச் சிறப்பை விளக்கித் தனி நூல்கள் செய்ய வில்லை. இந்நிலையில் கி.பி.18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திரிகூட ராசப்பக் கவிராயர் என்ற பெரும்புலவர் தோன்றினார். அவர் குற்றாலத்திலி ருந்து இரண்டு கல் கிழக்கேயுள்ள மேலகரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்; தாயுமான அடிகள் காலத்தவர்; மதுரையை ஆண்ட முத்து விசயரங்க சொக்கலிங்க நாயக்கர் பாராட்டுக்கு உரியவர். இப்பெரியார் குற்ற லத்தைப் பற்றிப் பதினான்கு நூல்கள் பாடியுள்ளார். அவை திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றால நாதர் உலா, திருக்குற்றாலக் கோவை, திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, திருக்குற்றால யமக அந்தாதி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல், திருக்குற் றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை, குழல்வாய் மொழி கலிப்பா, கோமளமாலை, வெண்பா அந்தாதி, பிள்ளைத்தமிழ், நன்னகர்வெண்பா என்பன. இவற்றுள் இறுதியிலுள்ள ஆறு நூல்கள் வெளி யிடப்படவில்லை; முதல் எட்டு நூல்களும் வெளியிடப் பெற்றுப் புலவர் பாராட்டுக்கு உரியனவாக இருந்து வருகின்றன. அவ்வெட்டு நூல்களையும் பற்றிய செய்திகளைச் சுருக்கமாக இங்குக் காண்போம். குற்றாலத் தலபுராணம் இந்நூல் இரண்டு காண்டங்களும் முப்பத் திரண்டு சருக்கங்களும், இரண்டாயிரத்து எழுபத்