உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 113 இப்புராணத் திரண்டு செய்யுட்களும் கொண்டது. தில் மலைமீதுள்ள சிற்றாறு பற்றிய விவரங்களும், அருவியிலிருந்து உ உருவெடுக்கும் சிற்றாறு பற்றிய விவரங்களும், திரிகூடமலை பற்றிய விவரங்களும் திருக்குற்றால நகரத்தைப் பற்றிய செய்திகளும், குற் றாலநாதர் கோவிலைப்பற்றிப் பல நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டுவந்த புராணச் செய்திகளும், பிறவும் விரி வாக இடம் பெற்றுள்ளன. குற்றால நகரத்தைச் சுற்றி மதிலும் அகழியும் இருந்தன. நகரத்தின் நடு நாயகமாகக் குற்றாலநாதர் கோவில் விளங்கியது. விழாக் காலங்களில் வசந்த வீதி தேரோடும் திருவீதி யாக விளக்கமுற்றது. இவ்வீதியில் பெண்கள் நடனம் ஆடுதற்கான அரங்குகள் அமைந்திருந்தன என்னும் விவரங்கள், திருநகரச் சருக்கத்தில் இருத்தலைக் காணக் கவிராயர் காலமான கி. பி. 18ஆம் நூற்றாண் டில் குற்றாலம் ஒரு நகரமாகவே இருந்தது என்பது தெரிகிறது. நகரத்திலிருந்த மாடமாளிகைகளின் அழகும், உயர்ந்த மாடிகள்மீது மகளிர் பந்தடித்து விளையாடிய நிலையும் *பிறவும் ஆசிரியரால் திறம்படக் கூறப்பட்டுள்ளன. குற்றாலநாதர் உலா இந் நூல் குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவ ராகக் கொண்டு, அவர் உலாவரும் சிறப்பைக் கூறு

  • பயிலுமேல் நிலைகள் தோறும் பந்தடித் தாடு வாரை மயிலெனக் குயில்பின் காட்ட, மழலைவாய் இசையால் அஞ்சிக் குயிலென மயில்பின் காட்டக் குழைகளால் அளகக் கொத்தால் வெயிலொடு புயலும் காட்டி மீட்டுமீட் டழையா நிற்பார்."

8 -திருநகரச் சருக்கம், செ. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/117&oldid=1693076" இலிருந்து மீள்விக்கப்பட்டது