உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3.4.1 சுதமதி கதை முற்பகுதி மணிமேகலையின் தோழியான சுதமதியின் வாழ்க்கை யைப்பற்றிப் பேசுகிறது இக்கதை. சுதமதி தன் கதையைத் தானே காப்பியத் தலைவியான மணிமேகலைக்குக் கூறு. கிறாள். தனித்து மலர் கொய்யச் சென்ற மேகலையிடம், தானும் உடன் வருகிறேன் என்று கூறிய சுதமதி, தனித்து மலர் கொய்யச் சென்றதால் தான் அடைந்த துன்பத்தை இக் கதையின் மூலம் எடுத்துச் சொல்லுகிறாள். இக்கதை, அக் காலச் சமுதாயச் சூழலைப் பிரதி பலிக்கின்றது. பெண் ஒருத்தி தனித்துச் செல்வதினால் ஏற்படும் துன்பத்தை ஆசி ரியர் இக்கதையின் மூலம் காட்டுகிறார். காப்பியத் தலை வியின் மனபலத்தை இக்கதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டு. கிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில், துறவு பூண்ட மேகலை, சமுதாயத்தை எதிர்த்து நின்று,தொண்டு செய்கிறாள் என்- சிறபோது, அவள் துறவின் சிறப்பு நமக்குத் தெள்ளிதின் புரிகி- றது. துணைப் பாத்திரமான சுதமதியைப் புரிந்துகொள்ள, இக்கதை நமக்கு உதவுகிறது. சுதமதி, மேகலையிடம் கொண்டுள்ள அன்பின் ஆரத்தையும், மேம்பாட்டையும் இக். தகூறுவதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது, துணைப் பாத்திரத்தின் கதை என்ற நிலையில் இது இயல்பாகக்காப்- பியத்துடன் இணைந்து நின்று, ஒட்டிய கிளைக் கதையாகத் திகழ்கிறது. 3.4.2 சுதமதி கதை-பிற்பகுதி இதுவும்,முற்கூறிய அதே சுதமதி பற்றிய கதை என்றா லும், முற்கூறிய கதையின் தொடர்ச்சி என்றாலும், இதைத்- தனி ஒரு கிளைக் கதையாகக் கொள்ளலாம். சாத்தனார் சுதமதி வாழ்க்கையை இரு வேறு பகுதியாக்கி, இரு வேறு நேரக்கில் காப்பியத்தில் எடுத்தாண்டுள்ளார். நோக்கமும். கதைப்பகுதியும் வேறுபடுவதால், இதைத் தனி ஒரு கிளைக்- கதையாகக் கொள்ளமுடிகிறது.