________________
57 இக்கதை மூலம் கீழ்க்கண்ட பௌத்தக் கொள்கை களைப் பேசுகிறார் சாத்தனார். 1) முற்பிறப்பில் செய்த தீவினையானது மறுபிறப்பில் உ..றுத்து வந்து ஊட்டும். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற கருத்தை இக்கதை உணர்த்துகிறது. 2) ‘கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழின் மாக்- கள் அவலப் படிற்றுறை ஆங்கது' என்ற கருத்தையும் இக் கதை கூறுகிறது. அதாவது, மன்பதையின் துயர்தீர்க்கும் பொருட்டு, வேள்விக் களத்தில் ஓர் உயிருக்காக மற்றொரு உயிரிரைப் பலியிடுவது என்பது அறமாகாது அது தீவினையே ஆகும். அதனால் விளைவது துன்பமே - என்பதையும் இக் கதை உணர்த்துகிறது. இக்கருத்து, பார்ப்பன மத அறியா மையை இடித்துரைப்பதாகும். 3. தெய்வத்திடம் வரம் கேட்டு நின்றால், அது வழி. வட்டோர் துயர் தீர்க்கும் வரத்தை வழங்கும் என்ற அந்த ணரின் நம்பிக்கை உண்மையானது அல்ல எனச் சம்பாதி தெய்வத்தின் கூற்று மூலம் உணர வைக்கிறார் சாத்தனார். 4. திடீர் என்று இறந்தவனைப் 'பேய் அடித்தது ' என்று கூறுவது மூட நம்பிக்கையாகும்; அறியாமையாகும் எனத் #ட்டிக் காட்டுகிறார். அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா பிணங்குநூன் மார்பன் பேதுகற் தாக ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது என, ஊழ்வினைக் காலம் சமீபித்த போது திடீரென்று இறக்கிறான். பேய், பிசாசு இவைகள் உயிருண்ணாது என்ற கருத்தை இக்கதைமூலம் சாத்தனார் எடுத்துரைககிறார். 5. இறந்துபட்ட உயிரைத் திரும்பவும் பிறப்பிக்க முடியாது, அது வினைக்கேற்ப மறுபிறப்பு எடுக்கும் என்பதை இக்கதை முடிவு கூறி நிற்கிறது.