உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 னோடு மணிபல்லலமடைந்த காதை' என்றும் இக்கிளைக் கதை நாயகன் பெயராலேயே மூன்று காதைகள் அமைந்து துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இக்கதையை இருவித நோக்கத்துடன் காப்பியப் புலவர் படைத்துள்ளார். ஆபுத்திரன் வரலாற்றைக் காட்டி, இத்த- கைய சிறந்த ஒருவன் கைப்பாத்திரம் மேசுலைக்குக் கிடைத். துள்ளது எனத் தலைமைப் பாத்திரத்தின் பண்பை உயர்த்திக் காட்டியுள்ளார். மேலும், ஆபுத்திரன் கதையை, மேகலை பற்றிய மையக்கதைக்கு இணையாகவும் (காப்பிய இணை) படைத்துக் காட்டியுள்ளார்.மேகலை, ஆபுத்திரன் இருவரும் பிறப்பால் தாழ்வுடையவர்கள் என்றாலும், செயல் மேம்- பாட்டால் போற்றத்தகுத்தவர்கள் என்பதையும், நோக்கத்- ஒன்றுபட்டவர்கள் என்பதையும் காட்டுவது டன் மட்டுமல்லாமல், அடையும் பேற்றாலும் ஒன்று பட்ட வர்கள் என இருவர் நிலைகளையும் சாத்தனார் இணையா கப் படைத்துக் காட்டியுள்ளார். தால் ஆபுத்திரன் வாழ்க்கையை அறிந்தால்தான், மேகலை கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபியின் மேன்மையை நாம் உணரமுடியும். இப்படி, காப்பிய மையக்கதையிைனுடயமுக்க கிய நிகழ்ச்சிக்கு இக்கதையே அடித்தளமாக அமைவதால், தை ஒன்றியக் கிளைக்கதையாகக் கொள்ள முடிகிறது. 3.4.9 ஆதிரையின் கதை 'பத்தினிப் பெண்டிர் இடும்பிச்சை ஏற்றல் பெருந்தகை. மையாகும்' என்று மணிமேகலை கூற, அதன் குறிப்பறிந்து மங்கல மனைப் பேணும் ஆதிரையின் கற்பின் திறம் கூறி. அவள் இடும் பிச்சை பெருந்தகைமை உடைத்து என காய- சண்டிகை கூறுகிறாள். இக்கதையில், ஆதிரையின் கணவன் சாதுவனின் முறையற்ற செயல், பின் அவன் திருந்தி பொருள் தேடச் செல்லுதல், மரக்கலம் உடைந்து நாகர் நாட்டிற்குச்