________________
64 டது. மேகலை அவனை நெறிப்படுத்தியது போன்ற நிகழ்ச்சி களைச் சொல்லுகிறார். இவையெல்லாம் காப்பிய ஓட்டத் திற்குச் சிறிதும் தேவையில்லாத நிகழ்ச்சிகள் தான். இருந்தும் இவற்றைச் சாத்தனார் படைத்திருப்பதற்கு, அவர், ஆபுத் திரன் வரலாற்றில் கொண்ட ஈடுபாடே காரணமாகும். த ஆபுத்திரன் கதை மூலம் சாத்தனார் பௌத்த மதக் கொள்கைகளையும், பிறமத எதிர்ப்பையும் படைத்துக் காட்டியுள்ளார். அவையாவன: பௌத்தக் கொள்கை: 1. நன்மைக்காகவும் பிற உயிரைக் கொல்லுதல் கூடாது. வேண்டும். 2. பசிப்பிணி நீக்குதல் தன்நிலை பேணாது அற்றாருக்குப் பசிப்பிணியை நீக்குதலே தலையா யக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். பிற மத எதிர்ப்பு: இக்கதையின் மூலம் சாத்தனார் பிராமண சமுதா யத்தை அதிகம் தாக்கியுள்ளார். பிராமண சமுதாய எதிர்ப்பு என்ற முழக்கமே இவரிடம் இருந்துதான் தோன்றியதோ என நினைக்கத் தோன்றுகிறது. பிராமண குவ முன் தோன் றல்களான வசிட்டனையும், அகத்தியனையும் கணிகைக்குப் பிறந்தவர்கள் எனச்சாடுகிறார். வேள்வியின்பால் உயிர்க் கொலை புரியும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை இடித்துரைக்கிறார். சிறப்பாகச் சொல்லப்போனால், இக்- கதை மூலம் சாத்தனார் வேதத்தை, வேள்வியை, வேதிய ரைச் சாடுகிறார் எனலாம். இக்கதை, இக்காப்பியத்தில் வரும் மற்றக்கிளைக் கதை. களைக் காட்டிலும் மிக நீண்ட கதையாகப் படைக்கப்பட்- டுள்ளது. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை' என்றும், ஆபுத்திரனோடு அடைந்த காதை' என்றும், 'ஆபுத்திர'