உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

03 ஆபுத்திரன் மறுபிறவியில் ஆ வயிற்றில் பிறந்தபோது, உலகில் புத்தன் பிறந்த போது நடந்த அகிசயங்கள் யாவும் நடந்ததாகச் சாத்தனார் படைத்துக் காட்டியுள்ளார். புத்தமதத்தினரிடம், 'புத்தர் மறுபடி மறுபடி பிறப்பெடுத்து அறம் கூறுவார்' என்ற நம்பிசகை உண்டு. ஆபுத்திரனைச் சாத்தனார் ஒரு புத்த அவதாரமாகவே கண்டிருக்கிறார் என்பதற்கு அவர் படைத்திருக்கும் விதமே சான்றாகி நிற்கி றது. படை. ஆபுத்திரன் கதை, கிளைக்கதை அமைப்பில் இருந்து சற்று மாறுபட்ட நிலையில், காப்பிய மையக்கதை பகுதி என்று அய்யுறும் வண்ணம், மையக்கதைக்குக் கொடுக்கும் முச்கியத் துவத்துடன் படைத்துக் காட்டப்பட்டுள்ளது. 'ஆபுத்திர வரலாறு' காப்பியத்துள் ஒரு சிறு காப்பியமென. தி துக்காட்டப்பட்டுள்ளது. 'பசிப்பிணியின் கொடுமை போக்கப் பாடுபட்டது' என்பதே இக்கதையின் முதன்மையான நிகழ்ச்சி என்றாலும், அந்நிகழ்ச்சிக்கு அழுத்தம்தர, அவ னது முன்பின் வரலாறுகள் தேவைப்பட்டிருக்கிறது என்- பதை இக்கதையை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாறா கவே படைத்துக்காட்டி விட்டார் சாத்தனார். தவிர அவர், 'ஆபுத்திரன் வாழ்க்கை வரலாற்றில்' கொண்டுள்ள ஈடுபாடும்,இப்படி வரலாறு பாடக் காரணமாகிறது. காப்பியப் புலவர் ஆபுத்திரன் வரலாற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்று கூறுவதற்குத் தக்க ஆண்டு. ஆபுத்திரன் பிறப்பு முதல் இறப்பு வரைக் கூறி முடித்தவர், காப்பியப் போக்கில் ஆங்காங்கே ஆபுத்திரன் இறந்தபின் அவனுக்காக வணிகர்கள் தங்கள் உயிரைத் துறந்தது, அவர்கள் எலும்புக்கூடுகள் புதையுண்ட இடாம்பூ ஆபுத்திரன் எலும்புக்கூட்டை அவனே மறுபிறவியில் பார்த் தது, அவன் மறுபிறவியில் புண்ணியராசனாய் அரசாண் சான்றுகள்