உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

71 2. கண்வனை அல்லது பிற தெய்வங்களை வணங்கு- வது சுற்புடைய மகளிர்க்கு இழுக்காகும். 3. அரசன், தன் மகனாயினும் பாராது, நீதி வழங்கி முறை செய்தல் வேண்டும். மணிமேகலைக்குத் துன்பம் செய்த உதயகுமாரன் செய்கைகளை அறிந்து, ஒறுக்காத சோழ மன்னனை மறை- முசுமாகக் கண்டிப்பதாகவும் இக்கதை அமைந்துள்ளது. இக்- கிளைக் கதையின் பயன்பாடும், இது தோன்றிய இட த்தி லேயே நிறைவு பெறுவதால் இதனை ஊன்று கிளைக் கதை யாகக் கொள்ளலாம். 3.4.25 விசாகை-தருமதத்தன் கதை மருதி கதையும்: இக்கதையும் ஒரே நோக்கத்துடன் எடுத்தாளப்பட்ட இருவேறு கிளைக்கதைகளாகும். மன்னன் மனதைப் பக்குவப்படுத்த எடுத்தாளப்பட்ட இக்கதையை மற்றொரு விதமாகவும் சாத்தனார் பயன்படுத்திக் கொள்- கிறார். இக்கதையின் மூலம் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிய பௌத்த கொள்கைகளைச் சாத்த னார் பேசுகிறார். இக்கதை கீழ்கண்ட பௌத்தக்கொள் கைகளைப் பேசுகிறது. I. 'பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் புத் தேள் உலகம் புகாஅர்' எனக் வைதீக மத நம்பிக்கையைச் சுட்டி, அதைத் தவறு எனக் கடிந்துரைக்கிறது. தவிர 'புத்- தேள் உலகம் புதல்வரும் தாரார்' எனச் சுட்டி, அறப்பயன் செய்வதின் மூலமாகவே, புத்தேள் உலகம் பெறமுடியும் என்ற பௌத்த நம்பிக்கையை இக்கதை எடுத்துரைக்கிறது. 2. இளமை, செல்வம், யாக்கை இவை நிலைபெற்றன அல்ல. நிலையாமையாகிய இவ்வுலகில் நிலைத்து நிற்கும் அறம் பேணல் வேண்டும் என்றும் இக்கதை சுட்டுகிறது.