உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 மல், அறக் கூறுவதையே பிரதானமாகக் கொண்டிருப்ப தால், இவர், கலை கலைக் காகவல்ல கலை வாழ்க்கைக் காகவே என்ற இலக்கியக் கொள்கையை உடையவர் என்பதை இனம் கண்டுகொள்ள முடிகிறது. பட்டியல் 1 (பக். 85.90) கிளைக்கதைகளை வகைப் படுத்திக் காட்டுகிறது. பட்டியல் - 2(பக். 90-95) கிளைக் கதைகளின் நோக்கங்களை வரிசைப்படுத்துகிறது.அதன் முடி வினை பக். 96-ல் காணலாம். அடிக்குறிப்புகள் 1. மணிமேகலை இல்லாவிடில் மணிமேகலைக் காப்பியம் இல்லை. முழுக்க முழுக்க அவள் ஒருத்தியே எல்லாக் கோணத் திலும் உயர்த்தப்படுகிறாள். ஆதவால் அவள் ஒருத்தியே தலைமைப் பாத்திரமாகவும் சிறக்கிறாள். உதயகுமாரன், மாதவி, சுதமதி. மணிமேகலா தெய்வம் போன்றோர் காப்- பியக் கதை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறத் துணை நிற்- கின்றவர்கள் ஆதலால் அவர்கள் துணை மாந்தர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். சித்ராபதி, அரசமாதேவி போன்- றோர் காப்பிய மையக் கதையில் பெரும் விளைவை ஏற்- படுத்தாவிட்டாலும், அக்கதை நிகழ்ச்சிகளுக்கு ஊன்று கோலாக நின்று உதவுவதால் அவர்கள் சிறு பாத்திரங்களா- கக் கொள்ளப்படுகிறார்கள். 2. மணிமேகலை, 5: 23-27 3. மேலது., 5: 75-77 4. மேலது., 6: 29-33 5. மேலது.. 6: 150-152 6. மங்களவதி கேபிரியல், மணிமேகலையில் காப்பி- யக் கூறுகள், பக்- 57