________________
99 காப்பிய முடிவில், சிறந்த துறவியாக உருவாக்குகிறார். இதற்கு, கிளைக்கதைகள்பெரும்துணை நிற்கின்றன. அதா- வது, சாத்தனார் பெரும்பாலான கிளைக்கதைகளை மணிமே கலை கேட்பதாகவே படைத்துள்ளார்.அவை யாவும், நீதிக் கருத்துக்களையும், பௌத்தக் கருத்துக்களையும் பேசுவதால் அவற்றைக் கேட்டு மேகலை படிப்படியாக மனத்தளவில் செம்மைப்பட்டு முடிவில் பௌத்தமதத்தின் சிறந்த துறம் யாக உருவாகிறாள். இந்தச்சூழலும், அமைப்பும் சிலப்பதி காரத்தில் இல்லை. காரணம், மணிே மகலையைப்போல் கண்ணகியை மனச்செம்மைப் படுத்தவேண்டிய சூழல் இளங்கோ அடிகளுக்கு இல்லை என்பதே. 4.4.சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டுமே சமயத் தைப்பற்றிப் பேசும் காப்பியங்களே. சிலப்பதிகாரம் சமணம், சைவம், வைணவம் என்ற முச் சமயத்தைப் பேசுகிறது. ஆனால், மணிமேகலை பெளத்த சமயம் ஒன்றுக்கே சிறப்புக் கொடுத்துப் பேசுகிறது. அதனால், பெரும்பாலான கிளைக் கதைகள் பௌத்தக் கருத்துக்களையே பேசுகின்றன. சில கிளைக்கதைகள் பௌத்தம் பேசுவதற்கென்றே வலிந்து படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு. சமயக் கருத்துக்களைப் பேசுவதற்காகவே கிளைக் கதைகள் அமைக்கும் போக்கும், கிளைக்கதைகளில் வலிந்து சமயம்பேசும் போக்கும் சிலப்பதி காரத்தில் இல்லை. 4.5 சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டுமே முற்பிறப்புக் கதைகளை எடுத்தாள்கின்றன. சிலப்பதிகாரத்தில் ஒரே ஒரு கிளைக்கதைதான் (கோவலன் கண்ணகி முற்பிறப்புக்கதை) முற்பிறப்பைப் பற்றிப் பேசுகிறது. அக் கிளைக்கதையும் காப்பியஓட்டத் தெளிவிற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சாத்தனார், மணிமேகலையில் 5 முற்பிறப்புக் கதைகளை எடுத்தாண்டுள்ளார். 2 இவர், இக்கதைகளைக் காப்பிய ஓட்- டத் தெளிவிற்காகப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறுவதைக்