உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5 காப்பியத்தில் துணைக்கதைகள் 5.0 காப்பியத்துள் பயின்றுவரும் மூன்று வகையான கதைகளுள் துணைக்கதையும் ஒன்று. காப்பிய மையக்கதை சில் ஆங்காங்கே சிறு விளக்கமாகவும்,வர்ணனையாகவும். எடுத்துக் காட்டாகவும், உவமையாகவும் இவ்வகைக் கதை கள் இடம் பெறுகின்றன. துணைக்கதைகள் காப்பியம் தொடர்ந்து நடைபெற உதவும் காப்பிய உறுப்புக்களாகத் திகழா என்றாலும், காப்பியச் சுவைக்காக,ஒர் உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துணைக் கதைகள் காப்பி வத்திற்குப் பெருமித நடை தந்து, காப்பிய நடையை, மற்ற இலக்கிய நடையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. 5.1 *'பல்வேறு புராணக்கதைகள், நாடோடிக்கதைகள் சுதைப்பாடல்கள் இவையெல்லாம் இணைந்த ஒரு தொகுப் பாகவே காப்பியம் விளங்குகின்றது" என்ற ஹட்சனின் காப்பியக் கொள்கையை உறுதிப்படுத்துவன துணைக்கதை. கள். இத்துணைக் சுதைகள், பல்வேறுபட்ட கதைகளின் சங்கமத் துறையாகக் காப்பியத்தை ஆக்கி, அதை உலகம் தழுவியதாக மிளிரச் செய்கின்றன. தவிர, இத்தகைய கதைகள் காப்பியப் புலவனின் பரந்துபட்ட அறிவிற்கும் சான்றாகத் திகழ்கின்றன. 5.2 துணைக் கதைகள் - விளக்கம் : துணைக்கதைகளில், கதை மிகச் சுருக்கமாகச் சொல்லப் ட்டும். அதாவது கதையின் கரு அல்லது கதையின் ஏதாவது