உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 1 1. புராணக் கதை 2. வரலாற்றுக் கதை 3. நாட்டுப்புறக் கதை என்ற மூன்று வகைகளில் அடக்கிவிடலாம். புராணசு கதை- கள் என்பது மும்மூர்த்திகள், தேவர்கள், அரக்கர்கள், முனி- வர்கள் பற்றிய கதைகளாக அமைந்திருக்கும். இவைகள் சாபவரலாற்றுக் கதைகளாகவோ, அவதாரக் கதைகளா- கவோ, இரு பிரிவினருக்கு ஏற்படும் போட்டிகள், அதன் விளைவுகள் பற்றிய கதைகளாகவோ அமைந்திருக்கலாம். வரலாற்றுக் கதை என்பது மன்னர்கள் பற்றியோ அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றியோ கூறுவ தாக அமைந்திருக்கும். புராண வரலாற்றுக் கதைகளையும் இப்பிரிவிலேயே அடக்கிவிடலாம். இவ்வகைக் கதைகளில் வரலாற்றுக் கதை மாந்தருடனோ, நிகழ்ச்சியுடனோ, புராணச் செய்திகளை ஏற்றிக் கூறப்பட்டிருக்கும். நாட்டுப்புறக் கதை என்பது, காப்பியம் எழுந்த நாடு தழுவியக் கதையாகும். நாட்டில், நாட்டில், எப்பகுதியிலாவது நிகழும் தனித்த, சற்று மாறுபட்ட நிகழ்ச்சிகளாக இவ வகைக் கதைகள் அமைந்திருக்கும். இம்மூன்றையும் தவிர, மற்றொரு வகையான துணை கதைகளும் உண்டு. இவை மிக அரிதாகவே காப்பியத்தி இடம்பெறும். தனிப்பட்ட ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி யாக இருக்கும். ஆனால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றி கதைகள் உரை தாக அமைந்திருக்காது. இவ்வகைக் யாடலின் போது கூற்றளவிலே வெளிப்படும். சான்றாக ஒருவர் ஒரு கொலையைப் பற்றிக் கூற, உடனிருப்பவர் தான் கண்ட, கேட்ட (நடந்த) பிற கொலை நிகழ்ச்சிகளை உடன் கூறுவது. இது போன்று அமைந்த துணைக்கதை