________________
123 கல்யாண குணங்கள் துணைக்கதைகளாகச் சிலம்பில் இடம் பெற்றுள்ளன. கம்சனின் வஞ்சம் தீர்த்தது, குருந்த மரத்தை வெட்டியது, பஞ்ச பாண்டவருக்குந்தூது சென்றது போன்ற கதை நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எடுத்தாளப்பட்டுள்ளன. கண்ணனைப்பற்றிய துணைக்கதைகள் பரவலாகச்சாப்பி யம் முழுவதும் எடுத்தாளப்பட்டிருந்தாலும், ஆய்ச்சியர் குரவையிலேயே மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளன கண். ணனைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள இடையர் குலப் பெண்டிர் அவனைப் பரவுமுகமாக அமைந்த இக்காதையில், அவனைப் பற்றிய துணைக்கதைகள் அதிகம் அமைந்துள்ளது பொருத்தமாக உள்ளது. கன்று குனிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழ்,1 என்றும், கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவனவாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ, என்றும் ஆயர் மகளிர் தோழிகளை விளித்து, கண்ணனைப் பாடிப் பரவும் முறை இலக்கிய நயம் மிக்கது. அடிகள், இவ் வாறு கண்ணன் அவதார நிகழ்ச்சிகளைத் தகுந்த இடத்தில் துணைக்கதைகளாகப் படைத்துக் காப்பியச் சுவையை மிகு. வித்துள்ளார். 4.2.1.2 இராமாவதாரக் கதைகள் திருமால், மனித உருவேற்று வந்த அவதாரம் இராமாவ தாரம். மனிதன அனுபவிக்கும் இன்பதுன்பங்களைத் தானும் அனுபவித்து, மனிதருள் மனிதராக வாழ்ந்து சிறந்த அவதாரம் இது. சாதாரண மனிதன் படும் துனபங்களான மனைவியை இழப்பது. வீடு துறந்து வாழ்வது போன்ற