________________
125 என்று ஆய்ச்சியர் திரு மாவை அவன் அவதாரச்சிறப்புப்பேசி, பரவித் துதிக்கின்றனர். இப்படிப் பரவல் மொழியாகவே. மற்றொரு தடவையும் இத்துணைக்கதைப் பயின்று வந்- துள்ளது. மேற்கூறியவாறு,திருமாலின் அவதாரக் கதைகள் காப் பியத்தில் ஆங்காங்கு இடம் பெற்று காப்பியத்தைச் சிறப்- க்கின்றன. 6.2. திருப்பாற்கடல் கடைந்த வரலாறு புராணக் கதைகளில் சில கதைகள் திருமால் மீதும், சி கதைகள் சிவன் மீதும் ஏற்றிச் சொல்லப் படுகின்றன. சில சமயம், ஒரே கதையை இருவர் மீதும் ஏற்றிப் பேசுவதும் உண்டு. திருப்பாற்கடல் கடைந்த வரலாற்றைச் சைவர்கள் சிவன் மீதும் வைணவர்கள் திருமால் மீதும் ஏற்றிப்பேசுவர். அடிகள். இக்கதையை மூன்று இடங்களில் துணைக் கதை- களாக எடுத்தாண்டுள்ளதால், இருமதக் கருத்துப் படியும். இவ்வரலாற்றைப் படைத்துக் காட்டியுள்ளார். திருமாலைப் பரவும் ஆய்ச்சியர் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன் பண்டொரு நாள் கடல்வயிறு கலக் கினையோ என்றும், பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் என்றும், அவனை ஏத்திப் பரவுகின்றனர். இவர்கள் கருத்துப். படி. திருமாவே பாற்கடல் கடைவித்தவன் என்பதும், அவனே இக்கதை - நிகழ்ச்சிக்கு நாயகன் என்பதும் பெறப்படுகின்றன. இக்கதையில் சிவன்பெறும் பங்கை இவர்கள் கூறவில்லை. வேட்டுள வரியில் கொற்றவையைப் போற்றும் மகளிர் சிவனின் இடப்பாகத்தவள் கொற்றவை ஆதலால், சிவனு