________________
135 அட்டவணையின் மூலம் அறியவரும் செய்திகள் 1. அதிகத் துணைக்கதைகளைக் கொண்ட காதைகள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில்தான் அதிகத் துணைக்கதைகள் பயின்று வந்துள்ளன. ஆய்ச்சியர் குரவை யில் 17 துணைக்கதைகளும், கடலாடு காதையில் 10 துணைக்கதைகளும், வஞ்சின மாலையில் 7 துணைக்கதைக- ளும் பயின்று வந்துள்ளன. இப்படி ஒரே காதையில் பல துணைக்கதைகள் பயின்றுவரும் குழலையும் நாம் அறிந்து- கொள்ள முடிகிறது. ஆய்ச்சியர் குரவையில் ஆய்ச்சியர், கண்ணனுடைய லீலைகளைச் சொல்லிப் பரவுகின்றனர். அதனால் அக்காதையில் துணைக்கதைகள் அதிகம் பயின்று வருகின்றன.கடாலாடு காதையில். மாதவியின் ஆடல் வர். ணிக்கப்படுகிறது. அப்பொழுது அவள் ஆடும் பதினொரு வகை ஆடல்கள் தெய்வங்கள் ஆடிய ஆடல்களை ஓத்திருந் தன என அடிகள் படைத்துக் காட்டுகிறார். அதனால், அத்- தெய்வங்கள் ஆடிய சூழல் பற்றிய கதைகள் அக்காதைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. வஞ்சின மாலையில் ணகி, தான் கற்புடைய மகளிர் பதியில் பிறந்தவள் என்பு- கைச் சுட்ட பல எடுத்துக்காட்டுக் கதைகளை அடுக்கடுக்- காசு எடுத்துக்காட்டுவதால், அக்காதையில் பல துணைக்- கதைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இளங்கோவடிகள் துணைக்கதைகளை தேவை சருதியே ஒரே காதையில் பல எடுத்தாண்டுள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கண்- 2. சிலப்பதிகாரத்தில் மொத்தத் துணைக்கதைகளில் 26 கதைகள் எடுத்துக்காட்டுக்களாகவும், 17 துணைக்கதை- கள் பரவு மொழியாகவும் பயின்று வந்துள்ளன. காப்பியங்- களில் பொதுவாக, எடுத்துக்காட்டுக்கதைகள் அதிகம் இடம். பெறுவதில் வியப்பொன்றுமில்லை. சிலம்பில், வழிபாட்டுப் பாடல்கள் அடங்கிய காதைகள் மூன்று இருப்பதால், பரவு மொழியாகத் துணைக்கதைகள் சற்று அதிகமாகப் பயின்று வந்துள்ளன.