________________
145 லையிலும் இக்கதையை எடுத்தாள்கிறார்.சித்ராபதி இராச மாதேவிக்கு இக்ககையைக் கூறுகிறாள். ஊர்வசி முதலான பதினொரு தேவ கணிகையர் தேவேந்திரன்முன் நடனமாட சயந்தனின் பார்வையால் ஊர்வசி நடனம் பிழைபட, அது கண்ட அகத்தியர் இட்ட சாபத்தால், அத்தேவ மகளிர் நில வுலகில் பிறந்தனர் என இக்கதை கூறுகிறது. இவ்வாறு, பலவகைப்பட்ட புராணக் கதைகளை இடை- யிடையே எடுத்தாண்டு, காப்பியத்திற்குச் சுவையூட்டியுள் ளார் சாத்தனார், 7.3 வரலாற்றுத் துணைக்கதைகள் சாத்தனார் தன் காப்பியத்தில் புராணக்கதையளவு வரலாற்றுத் துணைக் கதைகளைப் பயன்படுத்தவில்லை. அவர், ஐந்து வரலாற்றுக் கதைகளையும், இரண்டு புராண. வரலாற்றுக் கதைகளையும் எடுத்தாண்டுள்ளார். 7.3.1 கரிகாலன் கதை துணைக்கதையாகப் இக்கதை சிலப்பதிகாரத்திலும் பயின்று வந்துள்ளது. 118 கரிகால் பெருவளத்தான், வட திசைப் போர் மேற்கொண்டு சென்றான் என்ற வரலாற்று நிகழ்ச்சியே இங்குத் துணைக்கதையாக எடுத்தாளப்பட்டுள் னது. சிலம்பில் பின்னணி விளக்கக் கதையாக வந்த இக் கதை, மேகலையில் உவமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.3.2 கரிகாலன் நீதியுரைத்த கதை கரிகரவன் இளம் பருவத்திலேயே மன்னன் ஆனவன். அவன் ஆட்சிக்காலத்தில் முறை வேண்டி வந்த வாதி இருவர். மன்னன் இளையலனாய் இருப்பது கண்டு, நம்வழக்கிற்குத் தீர்வு காணமாட்டானோ எனத்தயங்கினர். இதனைக் குறிப் பினால் அறிந்துகொண்ட கரிகாலன் அவர்கள் அறியாது முதுமை வேடம் பூண்டு வந்து அறங்கூறினான். அம்முடிவு