________________
3. அடிமைக் காட்சி (கி.பி.1827-1832) ஏப்ரஹாம் லிங்கன் பதினேழு வயதுடைய இளைஞ- ராக இருந்த போது காட்டு வேலையில் ஈடுபட்- டார்; மரங்களை வெட்டினார்; அவற்றை அறுத்தார்; குடியேறின மக்கட்கு வேண்டிய வசதிகளைச் செய்- தார் ; உதவி வேண்டினவர்க்கு வேண்டிய உதவிகளை விருப்புடன் செய்தார் ; ஓய்வு நேரங்களில் அங்குக் குடியேறியிருந்த மக்களுடன் கலந்து உறவாடினார்; கற்றறிந்த அம்மக்கள் பேசுகையில் தாம் முன்னர் அறிந்திராத வெளி உலகச் செய்திகள் பலவற்றைக் கூர்ந்து கேட்டார். பட்டணங்களில் அன்றாடம் நடை பெற்று வந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசின போதெல்லாம் லிங்கன் அவற்றைக் கவனத்தோடு கேட்டு வந்தார்; அமெரிக்கக் குடியரசை ஏற்படுத்- தின மகா வீரரான ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றிக் கேள்விப்பட்டார்; உடனே அவாது வரலாற்றினைப் படித்தறிந்தார்; அவரைப் போலத் தாமும் மேலான நிலையை அடைந்து, அமெரிக்க மக்களுக்குத் தம்மா- லான நன்மைகளைச் செய்ய வேண்டுமெனத் தீர்மா னித்தார். நாளடைவில் லிங்கன் பரந்த நோக்கமும் விரிந்த சிந்தையும் உடையவர் ஆனார். அவர் அமெரிக்க அர- சாங்க விஷயங்களை நன்கு அறிந்துகொண்டார்; அர-