உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 தண்ணீர் கொணர்ந்தார் ; தந்தையாருடைய வேலைகளில் உதவி புரிந்தார் ; காயமுண்ட விலங்குகட்கும் பறவை- கட்கும் இரட்சகராக விளங்கினார். லிங்கன் பெரிய நகரங்களைக் காண அவாக்கொண்- டார்; அதற்காக ஒரு படகைத் தயார் செய்தார்; பிரயாணிகளைச் சாமான்களோடு பட்டணங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அவர் இருந்த இடத்தில் பத்திரிகைகள் இல்லை; பெரிய உத்தியோ- கஸ்தர்கள் இல்லை. அதனால், பட்டணங்களில் நடை- பெற்று வந்த விஷயங்களை அவர் அறிந்துகொள்ள வசதியில்லை. அதனால், அவர் படகை அமைத்துத் தொழில் முறையாகப் பட்டணங்களுக்குச் சென்று பழக்கம் பெறலாம் என்று நினைத்தார். அவர் விருப்- பமும் நிறைவேறிற்று. து அவர் ஒரு நாள் சில பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு மிசிசிப்பி நதியில் படகைச் செலுத்தினார்; படகு மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. லிங்கன் ஆற்றின் இரண்டு பக்கங்களையும் கூர்ந்து கவனித்துக்- கொண்டே சென்றார்; கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்த தோட்டங்களும், ஆரஞ்சுப் பழ மரங்களின் வரிசை- களும், மரப் பலகைகளால் கட்டப்பட்ட விடுதிகளும் அவர் கண்களைக் கவர்ந்தன. அப்போது லிங்கன் பார்த்த ஒவ்வொன்றும் அவருக்குப் புதுமையாகக் காணப்பட்டது. அவர் தாம் கண்டது கனவோ என்று ஐயுற்றார். ஏன்? அவர் அத்தகைய காட்சிகளை அதுவரையில் கண்டறியாதவர் அல்லவா?